2023ஆம் ஆண்டில் 50 ஓவர் உலகக் கோப்பையில் இரண்டாமிடம், 2024ஆம் ஆண்டில் டி20 உலகக் கோப்பை வெற்றி, 2025இல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வெற்றி என ஐசிசி தொடர்களில் இந்திய அணி தொடர்ச்சியாக சாதித்து வருகிறது. இதன்மூலம் சவுரவ் கங்குலி, எம்.எஸ். தோனிக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற இந்திய கேப்டன் என்கிற பெயர் ரோஹித் சர்மாவுக்கு கிடைத்தது.

இந்நிலையில் ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இந்திய அணி சாதித்து வருவது பற்றியும் டெஸ்ட் போட்டிகளில் சொதப்பி வருவது பற்றியும் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். “கடந்த 4-5 ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா சுமாரான ஃபார்மை வெளிப்படுத்தி வருவது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. ரோஹித் போன்ற நட்சத்திர அந்தஸ்து, திறமையுள்ள வீரர் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை பற்றி அவர் சிந்தித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அதுவும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைப் போலவே கடினமாக இருக்கும். அங்கும் ஸ்விங், வேகம் எல்லாம் இருக்கும்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுக்கு பிறகு என்ன செய்ய போறேனோ.? இப்பவே கோலி கண்ணைக் கட்டும் ஓய்வு.!

ஒரு நாள், டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சிறந்தவர். அவருடைய தலைமையில் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்தியா அசத்த வேண்டும். ரோஹித் சர்மா எப்போதும் சிறந்த கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் கேப்டனாக செயல்பட்ட என்னால், ரோஹித்திடம் தலைமைப் பண்புகள் இருப்பதை பார்க்க முடிகிறது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ரோஹித் இந்திய அணியை உச்சத்துக்கு அழைத்து சென்றதில் எனக்கு ஆச்சரியமில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோஹித் தொடர்ந்து விளையாடுவாரா என்று எனக்குத் தெரியவில்லை. தற்போது இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக செயல்படவில்லை. எனவே, இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வழியைக் கண்டறிய வேண்டும். ரோஹித் சர்மா இந்த இந்திய அணியை இங்கிலாந்தில் வெற்றி பெற வைக்கும் வழியைக் கண்டுபிடிக்க வேண்டும்" என்று சவுரவ் கங்குலி தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி வென்றது நியாயமில்லையா.? குற்றம் சாட்டியவர்களை கும்மிய ஆஸ்திரேலிய ஜாம்பவான்.!