ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19ஆம் தேதி முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தான், துபாயில் நடைபெற உள்ளது. இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெற உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன. இத்தொடரில் பங்கேற்கும் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த அணியில் கேப்டனாக ரோஹித் சர்மா, துணை கேப்டனாக சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவிந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட் ஆகிய 15 பேர் கொண்டோர் இடம் பெற்றிருந்தனர். என்றாலு இத்தொடரில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா காயம் காரணமாக விளையாடுவாரா என்ற கேள்வி இருந்தது. ஒரு வேளை அவர் இல்லை என்றால் அந்த இடத்தை நிரப்ப போவது யார் என்கிற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் இறுதிக்கட்ட அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளார் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்குப் பதிலாக அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

அதே போல தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதன்படி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மாவும் சுப்மன் கில்லும் இறங்குவார்கள். இவர்களுக்கு மாற்று வீரராக கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார்.
புதிய அணி விவரம் வருமாறு : ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்கள்), ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி
இதையும் படிங்க: ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்த இரண்டு அணிகளை அடிச்சிக்க முடியாது... ரிக்கி பாண்டிங் சொன்ன இரு அணிகள் இவைதான்.!
இவர்களுடன் துபாய் செல்லாத மாற்று வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், சிவம் துபே ஆகியோர் இருப்பார்கள். மேற்கண்ட 15 பேர் கொண்ட அணி வீரர்களுக்கு ஏதேனும் மாற்று தேவைப்பட்டால், இவர்கள் துபாய்க்கு செல்வார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி: எதிர்பார்த்த மாதிரியே இந்திய அணி அறிவிப்பு...