2025 ஐபிஎல் சீசனில் இன்றைய போட்டி மும்பை அணிக்கும் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து ஹௌதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் இசான் கிஷன் களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இசான் கிஷன் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக விளையாடிய முதல் போட்டியிலேயே அபாரமாக விளையாடி இஷான் கிஷன் சதம் அடித்தார்.

அதற்கு பின் ஆடிய 6 இன்னிங்ஸில் வெறும் 32 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷனை ரூ.6.2 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியது. ஏற்கனவே அதிரடி பேட்டிங் வரிசையை வைத்துள்ள ஐதராபாத் அணிக்கு, அவர் கூடுதல் வலிமை சேர்ப்பார் என்று எதிர்பார்த்தது. அதன்படி, ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
இதையும் படிங்க: 7வது ஓவரில் பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கவனம் தேவை... என்ன சொல்கிறார் இசான் கிஷன்?

அந்த போட்டியில் தனி ஆளாக 106 ரன்கள் குவித்தார். இதனால் அவர் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகமானது. ஆனால் இஷான் கிஷன் 2வது போட்டிக்கு பின் ஆடிய 6 இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே 32 ரன்களை தான் சேர்த்துள்ளார். இதனால் வரும் போட்டிகளில் ஹைதராபாத் அணியின் பேட்டிங்கில் இருந்து இஷான் கிஷனை நீக்கிவிட்டு அபினவ் மனோகருக்கு வாய்ப்பு வழங்கலாம் என்று கிர்க்கெட் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

மேலும் இஷான் கிஷனிடம் தொடக்க காலம் முதலே கன்சிஸ்டன்சி பிரச்சனை இருந்து வருவதாகவும் சிறந்த ஷாட்கள் இருந்தாலும், கொஞ்சம் ஸ்விங்கோ அல்லது பிட்சில் ஸ்பின்னோ இருந்தால், அவர் தடுமாறுவதை பார்க்க முடியும் என்றும் கூறிய கிரிக்கெட் வல்லுநர்கள், இன்றைய போட்டியில் கூட வில் ஜாக்ஸ் வீசிய பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து டர்னில் ஏமாந்து 2 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி அணியின் உரிமையாளர் காவிய மாறனும் டென்சனாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வான்கடே மைதானத்தில் இதைதான் செய்ய வேண்டும்.. மும்பை கேப்டன் ஹர்திக் தகவல்!!