2025 ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதை அடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் தொடகத்திலேயே சற்று தடுமாறினர். முதல் விக்கெட்டாக சஞ்சு சாம்சன் 13 ரன்களில் வீழ்த்தப்பட்டார். இதை அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் ரியான் பராக், பொறுமையாக ஆடி ரன்களை குவித்தார்.

அப்போது வருண் சக்கரவர்த்தி வீசிய பந்தை அவர் தூக்கி அடித்தார். பந்து உயரமாக சென்றதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் பந்தை பிடிக்க சென்றார். ஆனால், பந்து பார்க்க முடியாத உயரத்துக்கு சென்றதால் அதை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்பதற்காக தனது ஹெல்மட்டை கழட்டி எறிந்துவிட்டு அந்த பந்தை மிகச்சிறபாக கேட் பிடித்தார். இதனால் ரியான் பராக் விக்கெட் வீழ்த்தப்பட்டது. பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் மிக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இதையும் படிங்க: வீல் சேரில் ராகுல் டிராவிட்... என்னாச்சு அவருக்கு? பதறிய ரசிகர்கள்!!

வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா மற்றும் வருண் சக்கரவர்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தினர். இதனால் 20 ஓவர்களில் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 151 ரன்களை குவித்தது. இதை அடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக குவின்டன் டி காக் மற்றும் மொயின் அலி களமிறங்கினர். இதில் முதல் விக்கெட்டாக மொயின் அலியின் விக்கெட் வீழ்த்தப்பட்டது. இதை அடுத்து களமிறங்கிய ரஹானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் குவின்டன் டி காக் அபாரமாக ஆடினார்.

அவருக்கு ரகுவன்ஷியும் ஒத்துழைப்பு வழங்கினார். ஒருபுறம் குவின்டன் டி காக் அதிரடியாக ஆடிய நிலையில் மறுபுறம் ரகுவன்ஷி நிதனமாக ரன்களை குவித்தார். குவின்டன் டி காக் 8 பவுண்டிரிகளையும் 6 சிக்ஸர்களையும் விளாசினார். இதன் மூலம் அவர் 61 பந்துகளில் 97 ரன்கள் குவித்தார். 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குவின்டன் டி காக் கடைசியாக சிக்ஸ் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 8 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: பார்க்க முடியாத உயரத்திற்கு சென்ற பந்து... KKR விக்கெட் கீப்பர் செய்த வினோத செயல்!!