2025 ஐபிஎல் சீசனில் இன்றைய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. முன்னதாக பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் திட்டமிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. இதை அடுத்து மழை நின்ற பிறகு போட்டி தொடங்கியது. தாமதமாக தொடங்கியதால் 20 ஓவர் போட்டி 14 ஓவராக குறைக்கப்பட்டது. இதை அடுத்து டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது.

ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பில் சால்ட் 4 ரன்களிலும், விராட் கோலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதை அடுத்து வந்த லிவிங்ஸ்டோன் 4 ரன்களிலும் ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா 2 ரன்களிலும் குருணல் பாண்டியா 1 ரன்னிலும் அவுட் ஆகினர். ரஜத் பட்டிதார் 18 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதனால் ஆர்சிபி அணி 42 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஆர்சிபி அணியின் அதிரடி வீரர் டிம் டேவிட் 26 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என அரை சதம் விளாசினார்.
இதையும் படிங்க: கொஞ்சம் அசந்தா அவ்வளவுதான்... தோனியை பற்றி புட்டு புட்டு வைத்த ரோஹித் சர்மா!!

இதன் மூலம் ஆர்சிபி அணி 14 ஓவர் முடிவில் 95 ரன்கள் குவித்தது. 96 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரப்சிம்ரன் சிங் 13 ரன்களிலும் பிரியான்ஷ் ஆர்யா 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய சிரேயாஸ் ஐயர் 7 ரன்களிலும் யோசு இங்கிலிசு 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஷஷாங்க் சிங் 1 ரன்களில் அவுட் ஆனார்.

இவ்வாறு ஒருபுறம் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததாலும் மறுபுறம் நேகல் வாதேரா தனது அதிரடியான ஆட்டத்தை ஆடி 19 பந்துகளில் 3 பவுண்ட்ரிகள் 3 சிக்ஸர்கள் விளாசி 33 ரன்கள் குவித்தார். மறுமுனையில் மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: ஆட்டத்தை கெடுத்த மழை.. RCB vs PBKS போட்டி நடக்குமா? வெளியான முக்கிய தகவல்!!