18 ஆவது ஐபிஎல் தொடருக்கான முதல் போட்டியில் ஆர்சிபி பெங்களூர் அணியும் கேகேஆர் கொல்கத்தா அணியும் விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் டி காக் - சுனில் நரைன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. ஆர்சிபி அணி தரப்பில் முதல் ஓவரை ஹேசல்வுட் வீசினார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே டி காக் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

பின்னர் வந்த ரஹானே - சுனில் நரைன் கூட்டணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை குவித்தது. தொடர்ந்து அதிரடியாக ஆடிய ரஹானே 25 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். 10 ஓவர்களில் 107 ரன்கள் குவித்திருந்த நிலையில் சுனில் நரைன் 26 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ரஹானேவும் 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ரிங்கு சிங்கும் 12 ரன்களில் க்ருணால் பாண்டியா பந்தில் போல்டாகி வெளியேற, ரஸ்ஸல் 4 ரன்களிலும், ரகுவன்ஷி 30 ரன்களிலும் வெளியேறினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025: கேகேஆர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இதனால் கேகேஆர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்களை குவித்துள்ளது. க்ருணால் பாண்டியா 4 ஓவர்களில் 29 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனைத் தொடர்ந்து 175 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி தொடக்கம் முதலே அபாரமாக ஆடி வருகிறது. இதில் பில் சால்ட் - விராட் கோலி கூட்டணி மிக சிறப்பாக ஆடி ரன்களை குவித்து வருகிறது. கடந்த சீசனில் கேகேஆர் அணிக்காக ஆடிய பில் சால்ட், இம்முறை ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார்.

இருந்தபோதிலும் பாரம்பட்சம் பார்க்காமல் பந்துகளை தெறிக்கவிட்டார். வைபவ் அரோரா வீசிய முதல் பந்தில் பவுண்டரியுடன் தொடங்கிய பில் சால்ட், தொடர்ந்து சிக்சர், போர் என பந்துகளை பறக்கவிட்டார். இதன் மூலம் 25 பந்துகளில் அரைசதத்தை விளாசி அசத்தினார். ஐபிஎல் தொடரின் பில் சால்ட் அடிக்கும் 7வது அரைசதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஆடிய அவர், 31 பந்துகளில் 2 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட 56 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆர்சிபி அணிக்காக அறிமுகமான முதல் போட்டியிலேயே பில் சால்ட் அரைசதம் அடித்திருப்பது அந்த அணி ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது.
இதையும் படிங்க: ஈ சாலா கப் நம்தே... இந்த வருஷம் கப் ஆர்.சி.பி-க்கா? பிசிசிஐ செயலை வைத்து ரசிகர்கள் ஆரூடம்!!