ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் பிப்ரவரி 19இல் தொடங்கி மார்ச் 9 வரை நடைபெற உள்ளது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளன. இத்தொடரில் 8 அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இத்தொடருக்கான அணிகளை ஜனவரி 12 தேதிக்குள் மற்ற அணிகள் அறிவித்துவிட்டன. இந்திய அணி மட்டும் அணியை அறிவிக்க ஜனவரி 19 வரை ஐசிசியிடம் கால அவகாசம் பெற்றுள்ளது. இ ந் நிலையில் இந்திய அணியின் துருப்புச் சீட்டான வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா இந்திய அணியில் இடம் பெறமாட்டார் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆஸ்திரேலிய தொடரில் கடைசி டெஸ்ட் போட்டியில் பும்ரா காயமடைந்தார். அந்தக் காயம் குணமாக மார்ச் முதல் வாரம் வரை அவர் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அப்படியே பும்ரா அணிக்குத் திரும்பினாலும், நாக் அவுட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கும் வாய்ப்பு உண்டு, அதுவும் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் மட்டுமே சாத்தியமாகும். இந்நிலையில் காயம் காரணமாக ஓராண்டாக அணியில் விளையாடாமல் இருந்த முகமது ஷமி அணிக்கு திரும்பியுள்ளார். பும்ரா விளையாட முடியாதபட்சத்தில் அவருடைய இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமாரை தேர்வு செய்ய வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் முன்னாள் தேர்வுக் குழு தலைவருமான ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்,
இதையும் படிங்க: அதான் நான் இருக்கேன்ல்ல.. இந்திய அணியில் இடம்பிடிக்க முட்டிமோதும் ஸ்ரேயாஸ் ஐயர்!
"இப்போதும் திறமையான பந்துவீச்சாளராக புவனேஸ்வர்குமார் உள்ளார், அவரால் இரண்டு புறங்களிலும் பந்தை ஸ்விங் செய்து வீச முடியும். 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார், ஆனால், இந்திய அணி நிர்வாகம் அவரை இப்போது மறந்தே போய்விட்டது. ஒரு வேளை பும்ரா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியாமல் போனால், அவருடைய இடத்தில் புவனேஸ்வர்குமாரை விளையாட வைக்கலாம். அது அணிக்கு நல்ல முடிவாக இருக்கும்" என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கேப்டன் பதவியில் நீடிக்க இன்னொரு சான்ஸ் கேட்கும் ரோஹித்.. பிசிசிஐ நிலைப்பாடு என்ன.? புதிய தகவல்