209 ரன்கள் என்கிற இலக்கைத் துரத்திய டெல்லி அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்திருந்தது. அந்த நேரத்தில்தான் களமிறங்கினார் அசுதோஷ் வர்மாவுடன் இணைந்து, விப்ராஜ் லக்னோ பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 15 பந்துகளை எதிர்கொண்ட அவர் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி அணியின் வெற்றிக்கு உதவினார்.

விப்ராஜ் நிகம் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர். சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். பின்வரிசையில் காட்டடியில் பந்தை வெளுப்பவர். உத்தர பிரதேசத்தில் நடைபெறும் யுபி டி20 லீக் கிரிக்கெட் மூலம் ஏற்கனவே அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தவர். சென்ற ஆண்டு நடைபெற்ற யுபி டி20 லீக் சீசனில் 11 இன்னிங்ஸ் ஆடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதன் மூலம் உள்ளூர் கிரிக்கெட்டில் உத்தர பிரதேச மாநில அணிக்காக அனைத்து பார்மெட்டிலும் 2024-25 சீசனில் விளையாடினார்.
இதையும் படிங்க: டெல்லி அணி அபார வெற்றி... லக்னோ அணியை மிரளவிட்ட அஷிதோஷ்!!
கடந்த உள்ளூர் கிரிக்கெட் சீசனில் மட்டும் 3 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டி, 5 லிஸ்ட்-ஏ போட்டி, 7 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். 2024இல் சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் 7 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆந்திராவுக்கு எதிரான ஆட்டத்தில் 8 பந்துகளில் 27 ரன்களை எடுத்தார். இந்நிலையில்தான் ரூ.50 லட்சத்துக்கு அவரை மெகா ஏலத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது.

அந்த அணி விளையாடிய சீசனின் முதல் போட்டியில் அறிமுக வீரராக அவர் விளையாடும் வாய்ப்பை பெற்று, தோல்வியடையும் நிலையிலிருந்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார். இவருடைய பவர் ஹிட்டிங் பேட்டிங்தான் பலம். அதைப் பயன்படுத்தி இந்த சீசனில் டெல்லிக்கு எப்படி உதவுகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ஐபிஎல்-லில் ஏலம் போகாத கிரிக்கெட் வீரர்... DC vs LSG ஆட்டத்தில் தரமான சம்பவம்!!