பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து , வெங்கட தத்தா சாய் திருமணம் உதய்பூரில் வெகு விமர்சையாக நடைப்பெற்றது
இந்தியா சார்பில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளியும், 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கும் .தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டிருந்தது . அதன்படி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தினரும் சில முக்கிய விருந்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். பி.வி. சிந்துவின் திருமண வரவேற்பு டிசம்பர் 24-ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது . இந்த நிலையில் பி.வி. சிந்துவின் திருமண புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
தம்பதிகள் இருவரும் அவ்வளவு அழகா இருக்கிறார்கள் .இவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
இதையும் படிங்க: Champions Trophy 2025: இரண்டு குழுக்கள்.. 8 அணிகள்... உலகமே உற்று நோக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது..?