சாம்சங் நிறுவனம் அதன் சமீபத்திய மலிவு விலை ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ36 (Galaxy A36) ஐ அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற விலையில் சிறந்த அம்சங்கள் மற்றும் ஈர்க்கக்கூடிய கேமரா திறன்களுடன் வருகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது. கேலக்ஸி ஏ36 ஆனது Galaxy M35 ஐ நினைவூட்டும் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. முதன்மை பின்புற கேமரா 50 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது உயர்தர புகைப்படம் மற்றும் வீடியோ திறன்களை உறுதி செய்கிறது. முன்பக்கத்தில், 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வீடியோ அழைப்புக்கு ஏற்றதாக இருக்கும். கூடுதலாக, மொபைலில் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கூடிய வலுவான பேட்டரி இருப்பதாகவும், பயணத்தின்போது பயனர்களுக்கு நீண்டகால செயல்திறனை உறுதி செய்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: மாதம் ரூ.2,654 தான்..! சாம்சங் S23 Ultra வாங்க சரியான டைம் இதுதான்..!

Galaxy A36 ஆனது Qualcomm Snapdragon 7s Gen 2 SoC அல்லது Snapdragon 6 Gen 3 SoC சிப்செட்டால் இயக்கப்படலாம். இது Samsung இன் One UI 7 உடன் Android 15 இல் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy A36 இந்திய சந்தையில் OnePlus, Xiaomi, Vivo, OPPO, Nothing, மற்றும் Realme போன்ற மொபைல்களுடன் கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலிவு விலை, அதிநவீன அம்சங்கள் மற்றும் Samsung இன் நம்பகமான பிராண்ட் மதிப்பு ஆகியவற்றின் கலவையுடன், Galaxy A36 இந்த போட்டிப் பிரிவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்க முயற்சிக்கிறது என்று டெக் துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிங்க: மாதம் ரூ.2,654 தான்..! சாம்சங் S23 Ultra வாங்க சரியான டைம் இதுதான்..!