அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் விலையுயர்ந்த மொபைல் ரீசார்ஜ்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் பட்ஜெட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. ₹99 என்ற விலையில் அதன் சமீபத்திய சலுகையுடன், பிஎஸ்என்எல் தனியார் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களிடையே அன்லிமிடெட் இலவச குரல் அழைப்பை வழங்குகிறது.
பிஎஸ்என்எல்லின் ₹99 திட்டத்தின் அறிமுகம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை தங்கள் விலைகளைக் குறைக்க அழுத்தம் கொடுத்துள்ளது என்றே கூறலாம். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) உத்தரவுகளைத் தொடர்ந்து, போட்டியாளர்கள் குரல் மட்டும் திட்டங்களை அறிமுகப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

₹99 ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யும் சந்தாதாரர்கள் 17 நாட்கள் செல்லுபடியாகும். மேலும் அன்லிமிடெட் குரல் அழைப்புகளை அனுபவிப்பார்கள். இருப்பினும், இந்தத் திட்டத்தில் மொபைல் டேட்டா அல்லது SMS சேவைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10 மாதங்களுக்கு சிம் ஆக்டிவாக இருக்கும்!.. ஒரு ரீசார்ஜ் மட்டும் போதும்!..
அதிக ரீசார்ஜ் செலவுகள் இல்லாமல் தங்கள் எண்ணை செயலில் வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த புதிய மொபைல் ரீசார்ஜ் திட்டமானது ஜியோ, ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடுகிறது.
இதையும் படிங்க: ஜியோ, ஏர்டெல், விஐ சிம் வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்..! டிராய் முக்கிய அறிவிப்பு..!