ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த ஆலோசகருமான எலோன் மஸ்க்கின் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'க்ரோக் ஏஐ' என்ற சாட்பாட் அளிக்கும் பதில்களுக்காக சர்ச்சைகளை கிளப்பி வருகிறது. அது ஒரு தலைவராக இருந்தாலும் சரி, சாதாரண மனிதராக இருந்தாலும் சரி, க்ரோக் அனைவரின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது.

ஏஐ சாட்போட் க்ரோக் அளித்த பதில்கள் குறித்து மத்திய அரசுக்கு எக்ஸ்தளம் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக, அரசை சங்கடப்படுத்தும் கேள்விகள் க்ரோக்கில் தொடர்ந்து கேட்கப்படுகின்றன. க்ரோக்கும் அவற்றிற்கு பதிலளிக்கிறது... ஆனால் அந்தப்பதில்கள் பதில்கள் அனைத்தும் தர்மசங்கடமாக உள்ளன. இது தொடர்பாக அரசு எகஸ்தள நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையும் படிங்க: ஏர்டெல் உடன் டீல் போட்ட எலான் மஸ்க்.. இந்தியாவே மாறப்போகுது.. மகிழ்ச்சியில் மக்கள்!

க்ரோக் ஏஐ ஒரு பெரிய மொழி மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. இது ஓபன் ஏஐ-யின் கீழ் இயங்கும் சாட்ஜிபிடி, மற்றும் கூகுள் ஜெமினி போலவே செயல்படுகிறது. பயனர்களுக்கு அவர்களின் சொந்த மொழியில் பதிலளிப்பதே இதன் நோக்கம். மிகவும் கடினமான கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, ஊடாடும் உரையாடலுக்கான வசதியும் வழங்கப்பட வேண்டும். க்ரோக் ஏஐ எக்ஸ்தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இதன் மூலம் அந்த தளத்தில் கிடைக்கக்கூடிய தகவல்களை, தரவையும் பகுப்பாய்வு செய்தே பதில் வழங்குகிறது.

கடந்த சில நாட்களாக க்ரோக் ஏஐ-யின் பதில்கள் குறித்து சர்ச்சைகள் றெக்கைகட்டி பறக்கின்றன. பயனர்கள் கேட்கும் அதே கேள்விகளுக்கு இது உடனே பதிலளிக்கிறது. பயனர்களின் வேண்டுகோளின்படி க்ரோக்கும் காட்டமான பதிலை கொடுக்கிறது. அரசியல் தொடர்பான கேள்விகளைப் பற்றி நாம் கேட்டால், அது அளிக்கும் பதில்கள் சங்கடமானவையாகவே உள்ளன. அது ஆளும் கட்சித் தலைவர்களைப் பற்றியதாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றியதாக இருந்தாலும் சரி. இதைக் கருத்தில் கொண்டால், இந்தியாவில் அதன் பாதை மிகவும் கடினமாக இருக்கலாம்.

நாட்டில் உள்ள தரவு பாதுகாப்பு சட்டம் (DPDP சட்டம் 2023) மற்றும் தொழில்நுட்ப விதிகள் காரணமாக ஏஐ சாட்போட்களும் சிக்கலை சந்திக்க நேரிடும். சாட்ஜிபிடி மற்றும் கூகுள் ஜெமினி ஏற்கனவே இந்திய சந்தையில் வலுவான இருப்பைக் கொண்டுள்ளன. இந்நிலையில், க்ரோக் ஏஐ-யின் பாதை சவால்கள் நிறைந்ததாக இருக்கும்.
அரசு சமூக ஊடகங்கள், மற்றும் ஏஐ தொழில் நுட்பத்தை கண்காணித்து வருகிறது. க்ரோக் ஏஐ தொடர்ந்து சர்ச்சைக்குரிய, தவறான தகவல்களை வழங்கினால், அது விரைவில் தடையையும் சந்திக்க நேரிடும்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025-யை 90 நாட்களுக்கு இலவசமாக பார்க்கலாம்.. முகேஷ் அம்பானி கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்!