பிஎஸ்என்எல் பல மலிவு விலையிலான ரீசார்ஜ் திட்டங்கள் வழங்கி வருகிறது. 2024 ஜூலை மாதத்தில் Airtel மற்றும் Jio போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் பழைய விலையில் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் கோடிக்கணக்கான பயனர்களுக்கு இது விருப்பமான சேவை வழங்குநராக மாறியுள்ளது.
BSNL தனது 4g சேவைகளை விரிவாக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. Airtel, Jio, Vi போன்ற தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக BSNL செயல்படுகிறது. மேலும், நாடு முழுவதும் 4g டவர்களை அமைக்க TCS நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது. இந்த முயற்சி BSNL பயனர்களுக்கு விரைவான இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

தனது மலிவு விலையிலான ரீசார்ஜ் திட்டங்களுக்கு கூடுதலாக, BSNL தற்போது பயனர்களுக்கு பெரும் பரிசு வழங்கியுள்ளது. சில காலத்திற்கு முன்பு அறிமுகமான Bitv சேவையை, நிறுவனம் தற்போது அனைத்து ரீசார்ஜ் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எந்த ஒரு ரீசார்ஜ் திட்டத்தையும் செய்யும் போது, இலவசமாக 450-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களைப் பெறலாம்.
இதையும் படிங்க: 2வது சிம் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. உங்களுக்கான மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்..!
இந்த புதிய மாற்றம் இந்தியாவில் கோடிக்கணக்கான பயனர்களுக்கு பெரும் ஆதாயமாக இருக்கும். முன்னதாக தொலைக்காட்சி சேனல்களை பார்க்க DTH ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை இருந்தது. ஆனால் BSNL இப்போது எந்த கூடுதல் கட்டணமும் இல்லாமல் பயனர்களுக்கு இலவசமாக டிவி சேவையை வழங்குகிறது. Bitv என்பது BSNL வழங்கும் ஒரு நேரடி மொபைல் டிவி சேவையாகும்.
இதன் மூலம் 450-க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை பார்க்கலாம். இதில் செய்திகள், தஃபரஞ்சியல் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. மேலும், பிரபலமான வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களையும் இதன் மூலம் பார்க்க முடியும். தற்போது Bitv சேவை அனைத்து BSNL ரீசார்ஜ் திட்டங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இதற்காக தனியாக எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. ஆரம்ப கட்டத்தில் BSNL 300-க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை இலவசமாக வழங்கியிருந்தது. தற்போது இந்த சேனல்களின் எண்ணிக்கை 450-க்கு அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இலவச தொலைக்காட்சி சேவை வழங்குவதன் மூலம், BSNL தனியார் நிறுவனங்களை விட சிறந்த மதிப்புள்ள சேவையை வழங்கும் நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 1000 GB டேட்டா.. அதுவும் குறைந்த விலையில்..பிஎஸ்என்எல் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.!!