தற்செயலாக உங்கள் தொலைபேசி தண்ணீரில் விழுவது என்பது பலர் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சனை தான். இன்று ஸ்மார்ட்போன்கள் நீர்-எதிர்ப்பு அம்சங்களுடன் வந்தாலும், உங்கள் மொபைல் தண்ணீர் பாதிப்பால் பாதிக்கப்படும் வாய்ப்பு இன்னும் உள்ளது. எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கைகளை அறிந்துகொள்வது மேலும் தீங்கு விளைவிக்கும் அபாயத்தைக் குறைக்க நிச்சயம் உதவும்.
உங்கள் ஃபோன் தண்ணீரில் விழுந்தாலோ அல்லது நனைந்து விட்டாலோ என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். பலர் தங்கள் தொலைபேசி ஈரமாகிவிட்டால், அரிசி அனைத்து ஈரப்பதத்தையும் உறிஞ்சிவிடும் என்று நம்பி, அரிசியில் வைப்பதுதான் முதல் தவறான விஷயம் ஆகும். அரிசி சிறிது ஈரப்பதத்தை உறிஞ்சும் அதே வேளையில், அது சிறிய துகள்களை ஃபோனுக்குள் விட்டுச் சென்று, அதிக சேதத்தை ஏற்படுத்தும்.

எடுத்துக்காட்டாக, ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் வாடிக்கையாளர்களை இந்த நோக்கத்திற்காக அரிசியைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. இருப்பினும் பலர் இன்னும் அரிசி முறையைப் பின்பற்றுகிறார்கள். ஆனால் இது சிறந்த தீர்வு இல்லை என்று டெக் துறையை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். உங்கள் தொலைபேசி தண்ணீரில் விழுந்தால், முதலில் செய்ய வேண்டியது முதலில் ஸ்மார்ட்போனை ஆஃப் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: விலை குறைந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா!.. அம்பானியின் ஜியோ இந்தியர்களுக்கு கொடுத்த கிஃப்ட்!..
ஃபோன் ஈரமாக இருக்கும் போது அதை ஆன் செய்ய முயற்சிப்பது ஷார்ட் சர்க்யூட்டை ஏற்படுத்தலாம். நீரில் மூழ்கிய பிறகும் உங்கள் ஃபோன் பவர் ஆஃப் ஆகவில்லை என்றால், அதை மேனுவலாக ஆஃப் செய்ய பவர் பட்டனை அழுத்தவும். இது மொபைலின் உள்ளே ஏற்படும் சேதத்தைத் தடுக்க உதவுகிறது. அதேபோல மொபைலின் பட்டன்களை அழுத்துவதையோ அல்லது உங்கள் மொபைலை அசைப்பதையோ தவிர்க்கவும்.
இந்த செயலானது, தண்ணீரைத் தள்ளி, சேதத்தை மோசமாக்கும். மொபைல் ஃபோன் அணைக்கப்பட்டதும், சிம் கார்டு, மைக்ரோ எஸ்டி கார்டு மற்றும் பிற பொருட்களை அதிலிருந்து எடுக்க வேண்டும். ஈரமான மொபைலை உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் அல்லது மைக்ரோவேவ் பயன்படுத்த வேண்டாம். இது ஈரப்பதத்தை உங்கள் தொலைபேசியில் ஆழமாக அழுத்தக்கூடும்.

அதற்கு பதிலாக, தெரியும் தண்ணீரை அகற்ற ஒரு துணியால் தொலைபேசியைத் துடைக்கவும். தேவைப்பட்டால், உலர்ந்த, காற்றோட்டமான பகுதியில் தொலைபேசியை வைக்கவும். பிறகு உங்கள் ஃபோன் சரியாக வேலை செய்யவில்லை என்றால், அதை சர்வீஸ் சென்டர் (பழுதுபார்ப்பு மையம்) கொண்டு செல்வது நல்லது.
மொபைல் டெக்னீஷியன்கள் தண்ணீரால் சேதமடைந்த ஃபோன்களைப் பாதுகாப்பாகக் கையாள சரியான கருவிகள் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டுள்ளனர். மேற்கண்ட டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம் நீரில் விழுந்த மொபைலை எளிதாக சரிசெய்யலாம்.
இதையும் படிங்க: மொபைல் பேக் கவர் வாங்க போறீங்களா.? இதை முதலில் தெரிஞ்சுக்கோங்க.!