இப்போது வாட்ஸ்-அப்பில் ஒரு புதிய மோசடி வெளிவந்துள்ளது. இது மங்கலான பட மோசடி என்று அழைக்கப்படுகிறது. இந்த மோசடி மக்களை ஏமாற்றுவதற்காக மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் சைபர் குண்டர்கள் உங்கள் உணர்ச்சிகளையும், ஆர்வத்தையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். உங்கள் வாட்ஸ்அப்பில் மங்கலான படம் தோன்றியவுடன் முழு விளையாட்டும் தொடங்குகிறது. உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்பட்டு உங்கள் வங்கி பேலன்ஸை காலியாக்கி விடுவதோ மட்டுமே இதன் முடிவு. இந்த மோசடி எப்படி நடக்கிறது? அதன் பலியாகாமல் உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது.

இந்த மோசடியில், தெரியாத எண்ணில் இருந்து வாட்ஸ்அப்பில் மங்கலான புகைப்படம் உங்களுக்கு அனுப்பப்படும். அந்தப் புகைப்படத்தில் நம்மை கவரும் வகையில் ஒரு தலைப்பு கொடுக்கப்படும். அந்தப் புகைப்படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை அதிகரிக்கும். இந்தப் புகைப்படத்தில் இருப்பது நீங்கதானா? பாருங்க, உங்க பழைய போட்டோ எனக்குக் கிடைச்சுடுச்சு! கிளிக் செய்து அது யார் என்று பாருங்கள்? அப்படிப்பட்ட ஒரு வரியைப் படித்த பிறகு, அந்தப் புகைப்படத்தைக் கிளிக் செய்வதை உங்களால் நிறுத்த முடியாது. ஆனால் உங்களுடைய இந்த ஒரு கிளிக் உங்களை திவாலாக்கி விடும்.
நீங்கள் புகைப்படத்தைக் கிளிக் செய்யும்போது, புகைப்படத்தைத் திறக்க முயற்சிக்கும்போது, நீங்கள் ஒரு லிங்கிற்கு திருப்பி விடப்படுவீர்கள். இந்த லிங்க் ஒரு போலி வலைத்தளத்திற்கு செல்லும். அங்கு உங்கள் தனிப்பட்ட விவரங்கள், OTP அல்லது வங்கி விவரங்கள் கேட்கப்படும். சில சமயங்களில், இந்த இணைப்பு உங்கள் தொலைபேசியில் வைரஸ் அல்லது தீம்பொருளையும் வைக்கக்கூடும்.
இதையும் படிங்க: 7300mAh பேட்டரி.. AI அம்சங்கள்.. பவர்புல் பிராசஸர்.. மிரட்ட வருகிறது iQOO-வின் 2 மொபைல்கள்!

உங்கள் வங்கி பேலன்ஸ் காலியாகலாம். உங்கள் சமூக ஊடக கணக்குகள் ஹேக் செய்யப்படலாம். உங்கள் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம். உங்கள் மொபைல் வைரஸ் அல்லது ஸ்பைவேரால் பாதிக்கப்படலாம்.
தெரியாத எண்களிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்கள், இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும். வாட்ஸ்அப் தனியுரிமை அமைப்புகளை வலுப்படுத்துங்கள். உங்கள் வாட்ஸ்அப்பில் இரண்டு-படி சரிபார்ப்பை இயக்கத்திலேயே வைத்திருங்கள். இது தவிர, உங்கள் தொலைபேசியில் ஒரு வைரஸ் தடுப்பு செயலியை நிறுவி வைத்திருங்கள். நீங்கள் தவறுதலாக கிளிக் செய்திருந்தால், உடனடியாக கடவுச்சொல்லை மாற்றி வங்கிக்குத் தெரிவிக்கவும்.
இதையும் படிங்க: 6 மாதங்கள்.. சிம் கார்டு ஆக்டிவாக இருக்க.. அனைவருக்கும் ஏற்ற மலிவு விலை பிளான்.. சூப்பர் நியூஸ்!