சாலை வசதி இல்லாததால் அவலம்.. 8 கி.மீ டோலி கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.. பெண்ணை காப்பாற்ற முடியாததால் சோகம்..! தமிழ்நாடு கொடைக்கானல் அருகே நள்ளிரவில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, சாலை வசதி இல்லாததால் டோலி கட்டி மலைப்பாதையில் 8 கி.மீ உறவினர்கள் சுமந்து வந்த போதும் பெண்ணை காப்பாற்ற முடியாத சோகம் அரங்கேறி உள்ளது.