'அழகு ராணி'யானன இஷிகா தனேஜா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான "இந்து சர்க்கார்" என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெறும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பின்னர், தனது நடிப்பு வாழ்க்கையை உதறிவிட்டு சனாதன தர்மத்தை பின்பற்றப் போவதாக, அவர் அறிவித்திருக்கிறார்.
ஆன்மீகப் பாதையில் அடி எடுத்து வைத்த பின்னர், சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்த துணிச்சலான அறிக்கைகள் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார் இஷிகா. 2018 ஆம் ஆண்டு "உலக சுற்றுலா அழகி" பட்டத்தை வென்றவர் இவர். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நடைபெற்ற தனது குரு தீட்சை விழாவில் பங்கேற்று துறவறம்பூண்ட நடிகை இஷிகா தனேஜா, திருவேணி சங்கமம் வந்து மகா கும்பமேளாவின் புனித நீராடினார். சங்கராச்சாரியார் சுவாமி சதானந்த சரஸ்வதி ஜி மகா ராஜிடம் ஆன்மீக தீட்சை பெற்றார்.

அதன் பின் தனது புதிய பாதை குறித்து பேசுகையில், "நான் ஒரு பெருமைமிக்க சனாதனி. சேவை மனப்பான்மையுடன் இதில் நான் இணைந்து இருக்கிறேன். மகா கும்பமேளாவில் தெய்வீக சக்திகள் உள்ளன. எனது வாழ்க்கையின் மிகப் பெரிய சாதனையாக நான் குறிப்பிடுவது என்னவென்றால் சங்கராச்சாரியார் இடமிருந்து குரு தீட்சை பெற்று இருப்பது தான்.
இதையும் படிங்க: யூடியூபர் ரன்வீர் அல்லபாடியா மீது மும்பை போலீஸில் புகார்: பெண்கள் குறித்து முகம்சுழிக்கும் கருத்துக்கு வலுக்கும் கண்டனம்
குரு ஒருவர் இருப்பது எனக்கு வாழ்க்கையில் வழிகாட்டுதலை அளித்துள்ளது" என்றார். பெண்மையின் உண்மையான நோக்கம் குறித்த தனது கருத்துக்களை கூறிய அவர், "பெண்கள் சிறிய ஆடைகளை அணிந்து நடனமாட பிறந்தவர்கள் அல்ல; சனாதனத்திற்கு சேவை செய்யவே அவர்கள் படைக்கப்பட்டு இருக்கிறார்கள்" என்று கூறினார்.

தனது முந்தைய வாழ்க்கை முறைக்கு மாறும் திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டபோதும், எதிர்காலத்தில் திரைப்படங்களை தயாரிக்க தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 100 பெண் சாதனையாளர்கள் பட்டியலில் இவருக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
சினிமா படங்களில் மட்டுமின்றி விக்ரம் தயாரித்து எழுதிய ஹார்ஸ் என்ற வலைத் தொடரில் அவர் நடித்திருக்கிறார். மேலும் 60 மாடல்களில் வெறும் 60 நிமிடங்களில் 60 முழு ஏர் பிரஸ் ஒப்பனைகளை முடித்து கின்னஸ் உலக சாதனை பட்டியலிலும் இடம் பிடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: இணையத்தைக் கலக்கும் நிலவுக்கு என்மேல் என்னடி கோவம்...