1980களில் குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பூ, 1989ம் ஆண்டு "வருஷம் 16" என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் வெள்ளித்திரையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற முகமும், சின்னத்திரையில் சீரியலில் கதாநாயகியாக ஒரு முகமும், அரசியலில் சிங்கத்தை போன்ற கர்ஜனையுள்ள முகம் என பன்முகத்தன்மை கொண்டவர் என்ற பெயரை உடையவர்.

அதன் பின், தர்மத்தின் தலைவன், கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், சின்ன தம்பி, பிரம்மா, நாட்டுக்கு ஒரு நல்லவன், மன்னன், பாண்டியன், சிங்காரவேலன், அண்ணாமலை, புருஷலட்சணம், கேப்டன் மகள், நாட்டாமை, முறை மாமன், முத்து குளிக்க வாரீயளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, மின்சார கண்ணா, உன்னை தேடி,சுயம்வரம், அலைபாயுதே, உன்னை கண் தேடுதே, விண்ணுக்கும் மண்ணுக்கும்,கிரி, ஜூன் ஆர், பெரியார், பழனி, ஐந்தாம் படை, வில்லு, யாவரும் நலம், போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: வெளியானது 'கேங்கர்ஸ்' படத்தின் ஐட்டம் சாங்..! பாடல் வரிகளில் தெறிக்கவிட்ட சுந்தர்.சி..!

அதுமட்டுமல்லாமல், தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, கலகலப்பு 2, டிராபிக் ராமசாமி, நட்பே துணை, அரண்மனை 3, பட்டாம்பூச்சி, காப்பி வித் காதல், அரண்மனை 4, கேங்கர்ஸ் போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். இதற்கிடையில் இயக்குனர் சுந்தர் சி-ஐ திருமணம் செய்தார். இப்படி இருக்கும் நடிகை குஷ்பூ, ஏற்கனவே "அவ்னி சினிமேக்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தில் மேற்கண்ட திரைப்படங்களை தயாரித்து வழங்கினார்.

இப்படி பட்ட நடிகை குஷ்பூவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் தற்பொழுது தனது உடலை குறைத்து அழகாக காட்சியளிக்கும் அவந்திகாவிற்கு நிறைய ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இதனை அப்படியே தக்கவைக்க நினைத்த குஷ்பூ, தனது இளைய மகளான அவந்திகாவை எப்படியாவது சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து, பல இயக்குனர்களிடம் இதனை குறித்து தீவிரமாக பேசி வந்தார். இந்த சூழலில் தற்பொழுது ஒரு படத்தில் நடிகையாக நடிக்க இருக்கிறார் அவரது மகள் அவந்திகா.

இப்படி எந்த காரியம் எடுத்தாலும் அதனை எப்படியாவது சாதிக்க வேண்டும் என்பதில் குறிக்கோள் கொண்டு வாழ்பவர் குஷ்பூ. மேலும், அரசியல் மற்றும் தயாரிப்பாளர் என பாதுகாப்பாக இருக்கும் இவரது இணையதள பக்கத்தை மட்டும் அடிக்கடி பறிகொடுத்து விடுகிறார். இந்த நிலையில், நடிகை குஷ்பூ தனது எக்ஸ் தல பக்கத்தை அடையாளம் தெரியாத நபர்கள் ஹேக் செய்துவிட்டதாக அவரது இன்ஸ்ட்டா பதிவில் தெரிவித்துள்ளார்.

அதில், எக்ஸ் தளத்தில் எனது இ-மெயில் முகவரியை ஹேக்கர்கள் சிலர் மாற்றி உள்ளனர். ஹேக் செய்யப்பட்ட எக்ஸ் தள கணக்கை சரி செய்யும் முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன் என பதிவிட்டுள்ளார். மேலும் இதனை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, எனது சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்ஸ் முடக்குவது தேசத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இது முதல் முறையல்ல இரண்டாவது முறையாக எனது எக்ஸ் தளக்கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது எனக்கு மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது. இப்படி எனது சமூக வலைதளப்பக்கத்தை முடக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதங்கமாக கூறினார்.
இதையும் படிங்க: சினிமாவில் வாரிசு அரசியல்..! குஷ்பூவை தொடர்ந்து சினிமாவில் களமிறங்கும் மகள் அவந்திகா..!