நடிகர் ரஜினிகாந்தின் எந்திரன் படத்தை யாராலும் மறக்க முடியாது அதில் என்னதான் சிட்டி ரோபோ முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் அனைவரது கண்களில் தேடப்பட்டவராகவும் ரசிக்கப்பட்டவராகவும் இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். இவரது நடிப்புக்கு ஒரு கூட்டம் என்றால் இவரது அழகுக்கும் இவரது இடைக்கும் இவரது கண்ணுக்கும் ஒருகூட்ட ரசிகர்கள் இருக்க தான் செய்கின்றனர். இப்படி, இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என இவரை அனைவரும் கேள்வி கேட்கும் அளவிற்கு தனது அழகாலும் திறமையாலும் பல ரசிகர்களை மயக்கி வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.

இவர் என்ன தான் பாலிவுட்டில் கலக்கி வந்தாலும், தமிழில் இவரை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் மணிரத்தினம். அவரது படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர் தான் கண்ணழகி ஐஸ்வர்யா ராய். அதற்காவே தற்பொழுது 'பொன்னியின் செல்வன்' படத்தில் மீண்டும் அவரது இயக்கத்தில் நடித்து தனது பெயரை மீண்டும் மக்கள் மனதில் நிலைநிற்க செய்தார்.
இதையும் படிங்க: செய்யாதவனை விட்டுட்டு செய்யறவனையே பேசுங்க..! KPY பாலாவுக்கு சப்போர்ட் செய்த அமுதவாணன்..!

இப்படி தமிழ் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது நடிப்பை குறைத்து கொண்ட ஐஸ்வர்யா ராய் தற்பொழுது அதனை விட முக்கியமாக தனது குடும்ப வாழ்க்கையின் மீது அதிக ஆர்வமுடையவராக காணப்படுவதால் எந்த படங்களிலும் தற்பொழுது நடிப்பதில்லை.

பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் ஜெயா பச்சன் தம்பதியின் மகனான 'அபிஷேக் பச்சனை' திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். இவர்களது அன்பின் வெளிப்பாட்டில் மகளாக பிறந்தவர் 'ஆராத்யா'. இப்படி தனது கணவர் மற்றும் மகளுடன் சந்தோஷமாக நாட்களை கழித்து வரும் ஐஸ்வர்யா ராயை எப்பொழுதும் வதந்திகள் விட்ட பாடாய் இல்லை. உதாரணத்திற்கு, இவரது மகளை பற்றி சமீபத்தில் தவறான செய்திகள் வெளியாகின.

அதைத்தொடர்ந்து ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் பிரிந்து விட்டதாகவும், விவகாரத்து பெற்றிருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால், ஐஸ்வர்யா ராய் இதுகுறித்து எந்தவித ரியாக்சனும் காட்டவில்லை. பின்னர், வதந்திகள் அதிகமானதால் ஒருநாள் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவர்களது மகள் ஆராத்யாவின் புகைப்படங்களை பகிர்ந்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இப்படி படங்களில் இருந்து விலகியே இருந்தாலும், அவரை பற்றி பேசும் நாவுகள் இந்திய சினிமா வட்டாரத்தில் குறையாமல் தான் இருக்கிறது.
இதையும் படிங்க: அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!