"நீங்கள் என்னை அழைத்த பொழுது, ஏதோ கேண்டில் லைட் டின்னருக்கு தான் அழைத்தீர்கள் என்று நினைத்தேன்" என சுட்டித்தனமாக டைலாக் பேசி விஜய் முதல் பல இளசுகள் வரை கவர்ந்தவர் தான் நடிகை மாளவிகா மோகனன். மாஸ்டர் படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்திருக்கும் இவரை எதற்காக லோகேஷ் கனகராஜ் வைத்தார் என்ற சந்தேகமும் பலருக்கு வரும், அந்த அளவிற்கு படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வருவார் இவர்.

இப்படி இருக்க, "அந்த கண்ணை பார்த்தாக்க காதல் தானாக தோன்றாத" என்ற பாடல் நடிகைக்கு பொருந்தும் என்றால் உண்மையிலேயே அது மாளவிகா மோகனனுக்கு தான் பொருந்தும். அந்த அளவிற்கு உயரமும் அழகும் உடையவர். இவர் நடித்த தமிழ் படங்களின் மூலமாக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தற்பொழுது அனைத்து மொழி சினிமாத்துறையில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: "இந்த அசிங்கம் உனக்கு தேவையா கோபி"..! மாளவிக மோகனனிடம் வாங்கிக்கட்டி கொண்ட ரசிகர்..!

இந்த சூழலில், இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், அதன் பின் தான் மாஸ்டர், மாறன், தங்கலான் போன்ற திரைபடங்களில் நடித்தார். இது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு பலரது மனதையும் கொள்ளை கொண்டிருப்பார்.
இதனை தொடர்ந்து தற்போது கார்த்தி நடிக்கும் "சர்தார் 2" திரைப்படத்தில் கதாநாயகியாகவும், தெலுங்கில் மாருதி இயக்கத்தில் முதன்முறையாக பிரபாஸ், நிதி அகர்வால், சஞ்சய் தத் ஆகியோருடன் இணைந்து ‛தி ராஜா சாப்' என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ரயில் பயணத்தின் பொழுது தனக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார் நடிகை மாளவிகா. அதில், மும்பையில் உள்ள கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த பொழுது, எப்பொழுதும் எனக்கான காரில் தான் செல்வேன். ஏனெனில் என்னை பாதுகாப்பாக அனுப்ப, எனக்கென ஒரு கார் அதெற்கென ஒரு ட்ரைவர் இருப்பார்.
இதனாலே எப்பொழுதும் மும்பை பாதுகாப்பான நகரம் என பார்ப்பபவர்களிடம் சொல்லுவேன். ஆனால் ஒருமுறை ட்ரெயினில் செல்ல ஆசைப்பட்டேன். அதற்காக என்னுடைய நெருங்கிய நண்பர்கள் இருவர் இரவு 9:30 மணிக்கு என்னை கல்லூரியில் இருந்து வீட்டிற்கு லோக்கல் இரயிலில் முதல் வகுப்பில் அழைத்து சென்றனர்.

அங்கு ஜன்னல் ஓரமாக நாங்கள் அனைவரும் அமர்ந்து இருந்தோம். நாங்கள் ஏறியபொழுது எங்களை தவிர வேறு யாரும் முதல் வகுப்பில் இல்லை. அப்போது எங்களை நீண்ட நேரமாக பார்த்து கொண்டிருந்த ஒருவர் ஜன்னல் அருகே வந்து, கம்பிகளுக்கு அருகில் அவரது முகத்தை நெருக்கமாக வைத்து "எனக்கு ஒரு முத்தம் தருவாயா?" என்று கேட்டார்.
அதை கேட்டதும் நாங்கள் அப்படியே உறைந்து போய்விட்டோம். எப்பொழுது வீட்டுக்கு செல்வோம் என இருந்தது. ஒவ்வொரு பெண்ணுக்கும் இதுபோன்ற பல கதைகள் இருக்கும். எந்த இடமும் முழுமையாகப் பாதுகாப்பாக இருக்காது என்பதை அப்பொழுதுதான் உணர்ந்தேன்" என்கிறார்.
இதையும் படிங்க: குஷ்பூவை சீண்டிப்பார்க்கும் ஹேக்கர்ஸ்..! கடுப்பில் கொந்தளித்த சுந்தர் சியின் மனைவி..!