×
 

விராட் கோலி பற்றி மாதவன் போட்ட இன்ஸ்டா போஸ்ட்... எச்சரித்த அனுஷ்கா சர்மா!!

AI வீடியோவை நம்பி நடிகர் மாதவன் ஏமாந்துள்ளார். 

அண்மை காலமாக AI வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. உலக தலைவர்கள், சினிமா பிரபலங்கள் தொடர்பான AI வீடியோக்கள் நிஜமா, நிழலா என கேட்கும் அளவுக்கு தத்ரூமாக உருவாக்கப்படுகின்றன. அப்படி தான் ஒரு AI வீடியோவை நம்பி பிரபல நடிகர் ஒருவர் ஏமாந்துள்ளார். 
நடிகர் மாதவன் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக கொண்டாடப்பட்டவர்.

தற்போது ஒருசில திரைப்படங்களில் நடித்தாலும் தனக்கான அதே ஃபார்மில் இருந்து வருகிறார். சோஷியல் மீடியாவில் பிசியாக இருக்கும் மாதவனுக்கு நயன்தாரா முதல் கோலிவுட் பிரபலங்கள் வரை நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஷோஷியல் மீடியாவில் மாதவன் கண்ணில் ஒரு வீடியோ பட்டுள்ளது.

அதாவது உலக புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டர் விராட் கோலியை புகழ்ந்து பேசுவது போல் இருந்துள்ளது. அந்த வீடியோவை பார்த்த மாதவன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அதை ஷேர் செய்துள்ளார். அடுத்த சில மணி நேரங்களில் மாதவனுக்கு கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவிடம் இருந்து மெசேஜ் வந்துள்ளது.

இதையும் படிங்க: பிரியங்கா சோப்ராவுக்கு ஏமாற்றம்... இறுதி நிமிடங்களில் மாறிய முடிவு!!

அதை பார்த்த மாதவனுக்கு, ரொனால்டோ பேசியதாக வந்த வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என தெரிய வந்தது. அனுஷ்கா சர்மா சொன்னதால் அது AI வீடியோ என தெரிந்து கொண்டதால், உடனே தனது இஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ டெலிட் செய்தார். முன்னதாக மாதவன் பகிர்ந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அது உண்மை என நம்பிய நிலையில் தற்போது அவர் டெலிட் செய்ததால் ரசிகர்களும் குழம்பினர்.

இது மட்டுமில்லாம் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் மாதவன் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். பெண் ரசிகைகள் அவருக்கு ஹார்ட்டின், முத்தம் இமோஜிகளை அனுப்பி வைப்பதும், அதற்கு மாதவனும் தனது அன்பை வெளிப்பத்துவதையும் பகிர்ந்தார். இதை பார்த்த சிலர் மாதவன் பெண்களிடம் மட்டுமே பேசுவதாக கூறி வதந்தியை பரப்பினர்.

இதையும் படிங்க: ஆத்தாடி...! அஜித் போட்டிருக்கும் இந்த சட்டையின் விலை இவ்வளவா?... அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share