பிரபல நடிகையின் பாதங்களை பிடித்த ஜோதிகா...புகைப்படத்தை தேடி பார்க்கும் இணையவாசிகள்..!
ஜோதிகா பிரபல நடிகையின் பாதங்களை பிடித்து ஆசி பெறும் புகைப்படம் இணையத்தில் அநேகரால் பகிரப்பட்டு வருகிறது.
முந்தைய தலைமுறை மட்டும் அல்லாது இப்போதைய தலைமுறையினர் வரையில் ஜோதிகாவை தெரியாதவர் யாரும் இல்லை. "டோலி சஜா கே ரக்னா" என்ற ஹிந்தி படத்தின் மூலம் முதலில் சினிமாவில் அறிமுகமானவர். தமிழிலில் எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித்துடன் "வாலி" படத்தின் மூலம் அறிமுகமானார். அதுமட்டுமில்லாமல் தனது கணவரான சூர்யாவுடன் இவர் நடித்த முதல் திரைப்படம் "பூவெல்லாம் கேட்டுப்பார்".
இதனை தொடர்ந்து குஷி, தெனாலி, சந்திரமுகி போன்ற படங்களில் ஹீரோக்களுடன் ஹீரோயினாக நடித்த இவர், தனது திருமணத்திற்கு பின் தனி கதாயாகியாக ராட்சசி, 36 வயதினிலே, பொன்மகள் வந்தால், மகளிர் மட்டும், நாச்சியார் என பெண்கள் முன்னேற்றத்திற்கான படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ராட்சசி திரைப்படத்தில் "இவர்கள் தான் வரணும் இவர்கள் வரக்கூடாது என்பதற்கு இது என்ன கோவில் கர்ப்பகிரகமா" என கேட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: மீண்டும் வருகிறது சுந்தரா டிராவல்ஸ்.... படம் பார்த்துக்கொண்டே பஸ்ஸில் போக தயாரா..!
இது ஒருபக்கம் இருக்க, தற்பொழுது சூர்யா, ஜோதிகா மற்றும் அவரது குழந்தைகள் அனைவரும் மும்பையில் குடியேறி உள்ளனர். இதனை பற்றி சூர்யா கூறுகையில், எனது மனைவி எனக்காக எல்லாவற்றையும் விட்டு என்னுடன் இருக்கிறார். அவருக்கு பிரதி பலன் செய்ய ஜோதிகாவுடன் அவர் தாயார் வீட்டிற்கு சென்று உள்ளதாக கூறி இருந்தார். அதுமட்டும் இல்லாமல் கணவன் மனைவி என்றால் இப்படி இருக்க வேண்டும் என்று அனைவரும் பேசும் அளவிற்கு வாழ்ந்து வரும் சூர்யா ஜோதிகா, கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கையில் சூரரைபோற்று படத்திற்கான தேசிய விருதை பெற்றபொழுது இருவரின் கலாச்சார ஆடையை பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.
தற்போது டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸிலும், லையன் என்ற தமிழ் படத்திலும் நடித்து வரும் நிலையில்,நேற்று டப்பா காட்டெல் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது ஜோதிகா, நடிகை ஷபானா ஆஸ்மியின் பாதங்களைத் தொட்டு ஆசி பெற்றார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: படத்தில் ஹீரோ இவர் தான்.. ஒரே போஸ்டரில் பாராட்டுகளை அள்ளிய சத்யா..!