×
 

கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் எங்கு தெரியுமா..! பான் இந்திய ஸ்டாராக மாறி இருக்கும் கீர்த்தி..!

திருமணத்திற்கு பிறகு பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. 

இந்தியா முழுவதும் இன்று கிறித்து சுரேஷை தெரியாத ஆட்களே இருக்க முடியாது அந்த அளவிற்கு தனது நடிப்பாலும் அழகாலும் அனைவரையும் கவர்ந்த இவர், 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். பின், 2013ம் ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழில் விக்ரம் பிரபு நடித்த "இது என்ன மாயம்" திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். 

குறிப்பாக, சண்டைகோழி 2 படத்தில் டிவிஎஸ் எக்ஸலை வீலிங் செய்து அனைவரது ட்ரோலையும் வாங்கி குவித்து பிரபலமானார். அதன் பின் சாமி 2 படத்தில் பிரபுவிற்கு மகளாக நடித்த இவர், "பெண்ணே உன்ன பாத்தா என் நெஞ்சிக்குள்ள டியூனு" என்ற பாடல் மூலம் பிரபலமானார். இவை எல்லாம் ஒரு புறம் இருந்தாலும் இவரது அழகை ரசிகர்கள் மனதில் பதியவைத்த படம் "ரஜினிமுருகன்". அதில் வரும் "உன் மேல ஒரு கண்ணு" பாடலின் காட்சிகள் தான் அவரது முகத்தை அனைவரது நெஞ்சில் பதியவைத்தது.  

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷ் அணிந்து வந்த ஆடை.. கூகுளை ஆட்டம் காண வைத்த ரசிகர்கள்.. வைரல் போட்டோஸ்..!

இதுவரை நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம், தொடரி, ரெமோ, ரஜினி முருகன், பாம்பு சட்டை, பைரவா, சண்டகோழி 2, சீமராஜா, சாமி 2, சர்கார், நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், மிஸ் இந்தியா, பெண்குயின், மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம், அண்ணாத்த, சாணிக் காயிதம், குட் லக் சகி, மாமன்னன், சைரன், ரகு தாத்தா, கல்கி 2898 AD முதலிய படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை' 15 வருடங்களாக காதலித்து வந்த கீர்த்தி சுரேஷ், கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கோவாவில் பாரம்பரிய தமிழ் பிராமண மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண நிகழ்ச்சியில் ஏராளமான திரை பரபலங்கள் கலந்துகொண்டனர்.  

 

தனது திருமணத்திற்கு பின் ஹனிமூனில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் இனி நடிப்பாரா மாட்டாரா? என்னும் சந்தேகம் ரசிகர்கள் மனதில் இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்பொழுது தரமான அப்டேட் கிடைத்துள்ளது. அதன் படி, நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பாலிவுட்டில் ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த தகவலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த கீர்த்தி, தற்பொழுது அதனை பகிரங்கமாக அறிவித்து இருக்கிறார். இதனால் நடிகை கீர்த்தி சுரேஷும் பான் இந்திய ஸ்டாராக மாறி இருக்கிறார்.

இதையும் படிங்க: ஸ்ரீலங்காவையே மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. ஹனிமூனில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share