70 வருட பழைய பட்டு புடவையில்... வின்டேஜ் லுக்கில் கலக்கும் பூஜா ஹெக்டே!
நடிகை பூஜா ஹெக்டே 70 வருட பழமையான, தன்னுடைய பாட்டியின் பட்டு புடவையில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பூஜா ஹெக்டே மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவராக இருந்தாலும் கதாநாயகியாக அறிமுகமானது தமிழில் தான்.
இயக்குனர் மிஸ்கின், நடிகர் ஜீவா-வை வைத்து சூப்பர் ஹீரோ கான்செப்ட்டில் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் அறிமுகமானார்.
இதையும் படிங்க: பிரபல நடிகர் திரைப்படத்தில் பூஜா ஹெக்டே..! ஐஸ்வர்யா ராய் ஜோடியை தன்வசமாக்கிய அழகி..!
இந்த படத்தின் படுதோல்வி பூஜா ஹெக்டேவுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து, தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கினார். அங்கு வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட நிலையில், இவர் நடித்த படங்கள் ஹிட் அடித்தன.
மொஹஞ்சதாரோ திரைப்படத்தில், ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஹிந்தியிலும் அறிமுகமானார்.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறிய பின்னர், தமிழில் தளபதி விஜய்க்கு ஜோடியாக ரீ என்ட்ரி கொடுத்தார்.
நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், தளபதிக்கு பேராக இவர் நடித்த பீஸ்ட் படம் யாரும் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியது.
இதன் பின்னர், தற்போது சூர்யாவுக்கு ஜோடியாக ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார்.
இந்த படம் மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
அதே போல் ஜனநாயகம் படத்தில் தளபதிக்கு ஜோடியாகவும், கூலி படத்தில்... ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். பிஸி ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் பூஜா ஹெக்டே தற்போது 70 வருட பழமையான தன்னுடைய பாட்டியின் பட்டு புடவையில் எடுத்து கொண்ட புகைப்படங்களை வெளியிட அவை வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: முடிவுக்கு வந்தது விஜயின் 'ஜனநாயகன்' திரைப்படம்..! இனி தான் ஆட்டம் சூடுபிடிக்க போகிறது..!