அர்ஜுன் மகளுக்கு வெளிநாட்டு காதலர் கொடுத்த பரிசு! வைரலாகும் புதிய போட்டோஸ்!
அர்ஜுன் மகள் அஞ்சனா தன்னுடைய காதலருடன் எடுத்து கொண்ட புதிய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட அவை வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்ஷன் ஹீரோவாக அறியப்படுபவர் அர்ஜுன்.
இதன் காரணமாகவே இவரை ரசிகர்கள் ஆக்ஷன் கிங் என அழைக்க துவங்கினர்.
அறிமுகம் கன்னடம் என்றாலும், தமிழ் சினிமா தான் இவரை உச்ச நடிகராக மாற்றி அழகு பார்த்தது.
எனவே நடிகை நிவேதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு சென்னையிலே செட்டில் ஆனார்.
அர்ஜுனுக்கு இரு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரு மகள்கள் உள்ளனர்.
மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கும், தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.
இதை தொடர்ந்து இரண்டாவது மகள் அஞ்சானாவின் திருமணமும் கூடிய விரைவில் நடைபெற உள்ளது.
அஞ்சனா இத்தாலியை சேர்ந்த தன்னுடைய 13 வருட காதலரை தற்போது திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார். இதையே அர்ஜுன் குடும்பம் ஒரு கொண்டாட்டமாகவே மாற்றியுள்ளார்.
இதையும் படிங்க: அர்ஜுன் 2-ஆவது மகள் அஞ்சனாவுக்கு விரைவில் டும் டும் டும்.! மாப்பிள்ளை யார் தெரியுமா?
அஞ்சனாவுக்கு காதலர் வைர மோதிரம் ஒன்றை பரிசாக கொடுத்ததோடு இருவரும் கேக் வெட்டி இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஏற்கனவே இதுகுறித்த சில புகைப்படங்களை வெளியிட்ட அஞ்சனா தற்போது இன்னும் சில புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதே நேரம் இது நிச்சயதார்தமா? என்றும் சில ரசிகர்கள் கேள்வியை முன்வைத்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: பட வாய்ப்புக்காக இப்படி? கவர்ச்சிக்கு தாவிய பிரியங்கா மோகன் போட்டோஸ்!