ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ரசிகர்கள் மனதை சிறகடிக்க வைத்த ஷிவானி நாராயணன்!
சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்து, ஹீரோயினாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயற்சித்து வரும் ஷிவானி நாராயணனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'பகல் நிலவு' சீரியல் மூலம், சின்னத்திரையில் ஹீரோயினாகஅறிமுகமானவர் ஷிவானி நாராயணன்.
15 வயதிலேயே ஹீரோயினாக மாறிய இவருக்கு ,இந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். அதேபோல் முதல் தொடரிலேயே மிகவும் மெச்சூர்டான ரோலில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சல்வார் அணிந்த சொர்க்கமே..! பிங்க் சல்வாரில் பளீச் என மின்னிய ஷிவானி நாராயணன்!
இந்த சீரியலில் ஹீரோவாக பிக்பாஸ் டைட்டில் வின்னர் அசீம் நடித்திருந்த நிலையில், ஷிவானி மற்றும் அசீம் கெமிஸ்ட்ரி அதிகம் ரசிக்கப்பட்டது. மேலும் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட 'கடைக்குட்டி சிங்கம்' தொடரிலும், இருவரும் இணைந்து நடித்தனர்.
அசீம் தன்னுடைய மனைவியை பிரிய உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அதற்கு காரணம் ஷிவானி உடனான தொடர்பு தான் என வதந்திகள் பரவியது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அந்த தொடரில் இருந்து அதிரடியாக வெளியேறினார். பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் துவங்கப்பட்ட இரட்டை ரோஜா என்கிற சீரியலில் டுயல் ரோலில் நடித்தார்.
இந்த தொடரில் இருந்தும் பாதியிலேயே வெளியேறி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஒரே மாதத்தில் மூட்டையை கட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெற்றிகரமாக 90 நாட்களுக்கு மேல் நிலைத்து விளையாடினார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர், சீரியல் வாய்ப்பு கிடைத்தாலும் அதனை தவிர்த்து விட்டு திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகிறார்
அந்த வகையில் விக்ரம், பம்பர் , நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் போன்ற சில படங்களில் நடித்தார். தற்போது அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதில் ஆர்வம் காட்டி வரும் ஷிவானி நாராயணன், நீல நிற ட்ரான்ஸ்பரென் சேலையில் அழகிய போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சுருட்டை முடி அழகில்... சுண்டி இழுக்கும் அழகு! ரித்திகா சிங் போட்டோஸ்!