×
 

முன்னாள் காதலை நினைவு கூற தயாரா..? கோடை காலத்தில் கண்ணீரில் நனைக்க வருகிறது "ஏஐ ஆட்டோகிராப்" படம்..!

புதிய பரிமாணத்தில் மனதை உடைக்க ஏஐ தொழில்நுட்பத்தில் வெளியாகும் தேதியை அறிவித்தது உள்ளனர் ஆட்டோகிராப் படக்குழுவினர்.

காதல் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல படங்கள் வந்தாலும், காதல் பிரிவையே அழகாக படமாக்கிய ஒரே படம் என்றால் அதுதான் "ஆட்டோகிராப்" திரைப்படம். இந்தப் படம் வந்த பொழுது, அதை பார்த்த பலர், தங்களது காதல் நினைவுகளை எண்ணி மனவேதனை அடைந்து வீட்டில் கதவை பூட்டி கதறி அழுத நாட்கள் உண்டு. இன்றும் தனியார் தொலைக்காட்சியில் இந்த படத்தை போட்டால், அதைப் பார்க்க ஒரு கூட்டமே உண்டு.

நம் கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு இன்பத்தையும் கொடுத்த இப்படத்தை எடுக்க சேரன் பட்ட பாடுகள் அதிகம். இப்படத்தை எடுக்க பல நடிகர்களை சந்தித்த இயக்குநர் சேரன், ஆட்டோகிராப் படத்தின் கதையை சொன்ன பொழுது ஒருவரும் நடிக்க முன் வரவில்லை. இதனால் மனம் உடைந்த சேரன், நம் கதைக்கு நாம் தான் கதாநாயகன் என முடிவு செய்து, தானே கதாநாயகனாக களம் இறங்கி, சினேகா, கோபிகா, மல்லிகா, கனிகா, இளவரசு, கிருஷ்ணா உள்ளிட்ட பல நடிகர்களுடன் இணைந்து நடித்தும் இயக்கியும் 2004 ஆம் ஆண்டு "ஆட்டோகிராப்" படத்தை ஆண்டு வெளியிட்டார்.

இதையும் படிங்க: சமந்தா சென்ற சோலோ ட்ரிப்...! பெண் சிங்கம் சிங்கிளாக வலம் வந்த புகைப்படம்..!

பல நடிகர்கள் நிராகரித்த ஆட்டோகிராப் சேரனின் நடிப்பிற்கும், இயக்கத்திற்கும் அடுத்த மைல்கல்லாய் அமைந்தது. இப்படி ஒரு படமா என நடிகர்கள் வியந்து பார்த்து, பேசாமல் இப்படத்தில் நடித்திருக்கலாமே என்று யோசிக்க கூடிய அளவிற்கு அபார வெற்றியை தேடித்தந்தது இப்படம். நட்பு, காதல், பிரிவு, வலி என அனைத்தும் கலந்த ஆட்டோகிராப், தேசிய விருது, சிறந்த படத்துக்கான பிலிம்பேர் விருது என பல்வேறு விருதுகளை பெற்று தந்தது. காதல் படம் என்றால் அன்றும் இன்றும் என்றென்றும் நினைவுக்கு வரும் ஒரே திரைப்படம் ஆட்டோகிராப் என்ற பெயரை பெற்ற ஒரே திரைப்படம் என்ற பெருமையும் உள்ளது.

இந்த நிலையில், அப்பொழுதே நூறு நாட்களைக் கடந்து வசூலில் சாதனை படைத்த ஆட்டோகிராப் திரைப்படம் வெளியாகி "21 ஆண்டுகள்" நிறைவடைந்து உள்ளது. இயக்குநர் சேரனின் திரையுலக பயணத்தில் ஹிட் கொடுத்த இந்த படம் மீண்டும் AI தொழில்நுட்பத்தில் கண்களுக்கு விருந்தாக, புதிய பரிமானத்தில் ரீரிலிஸ் செய்யப்பட இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

அதுமட்டும் இல்லாமல் AI தொழில்நுட்பத்தில் இப்படத்திற்கான ட்ரைலரும் வெளியாகி இருந்தது. அதில் மண்புழுதியில் சைக்கிள் ஓட்டிய சேரன், தற்போதைய ட்ரெண்டிங் உடை அணிந்து வயல்வெளிகளிலும், வெளிநாடுகளிலும் சைக்கிள் ஓட்டி பாடுகிறார். சினேகா அதை விட சூப்பர் லொகேஷனில் பார்க்க அழகாக இருக்கிறார். 


இதை பார்த்து படத்தின் ரிலீ(ஸ்க்)காக காத்திருந்த ரசிகர்களுக்கு தரமான அப்டேட் கிடைத்துள்ளது. அதன் படி, 21 ஆண்டுகளுக்குப் பிறகு 'ஆட்டோகிராப்' படம் வருகின்ற மே 16ம் தேதி கோடை விடுமுறையில் ரீ-ரிலீஸாக உள்ளது என்ற அதிகாரபூர்வ தகவலை போஸ்ட் போட்டு அறிவித்து இருக்கிறார் இயக்குனர் சேரன்.


இதனை பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்த படத்தை மீண்டும் குடும்பத்துடன் பார்க்க காத்திருக்குகிறோம் என பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்...! கண்ணீர் விட்டு கதறிய வரலட்சுமி, கேமி..! கட்டியணைத்து அழுத ஸ்னேகா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share