×
 

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்...! கண்ணீர் விட்டு கதறிய வரலட்சுமி, கேமி..! கட்டியணைத்து அழுத ஸ்னேகா..!

பிரபல தனியார் நிகழ்ச்சியில் அழுதபடி வரலட்சுமி மற்றும் கேமி ஆகிய இருவரும் தங்கள் வாழ்வில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்துள்ளனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் தனது திறமைகளை காண்பித்து தங்களுக்கான பரிசுகளை பெற்று வருகின்றனர். அதே நிகழ்ச்சியில் இந்த வாரம் அனைவரையும் கலங்கடிக்கும் இரண்டு சோக சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. ஒன்று நடுவரான வரலட்சுமியின் வாழ்வில் நடந்த உண்மை கதை மற்றொன்று போட்டியாளரான கேமியின் வாழ்வில் நடந்த சோக கதை தான். 

இப்படியிருக்க இந்த நிகழ்ச்சியில் போன வாரம், தொகுப்பாளினி மணிமேகலை, போட்டியாளருக்கு அட்வைஸ் பண்ணும் வகையில், "நான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளராக தான் இருந்தேன். ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த பொழுது, இவங்க நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக லீட் கொடுப்பாங்க, அதுவுமில்லாம லிங்க் கொடுப்பாங்க, இவங்கள நிகழ்ச்சியில் கோமாளியாக பண்ண விட்டா எப்படி பண்ணுவாங்கனு ரொம்ப ஏளனமா பேசுனாங்க. ஆனா, இப்போ மணிமேகலை சூப்பரா பர்வார்ம் பண்ணுவாங்க, அவங்களுக்கு ஆக்டிங்கும் வருமா என அனைவரும் கூறும் அளவுக்கு இப்போ உயர்ந்து இருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது உழைச்சா எது வேணா செய்யலாம்.. புரியுதா" என கண்கலங்கி பேசினார். 

இதையும் படிங்க: பிரபல ஷோவுக்கு வீடியோ காலில் வந்த பிரபலம்...! வீட்டிற்கு அழைத்து நெகிழ்ச்சி அடைய செய்த சுவாரசிய சம்பவம்..!

இரண்டாவதாக, இப்போட்டியில் பங்கு பெற்று நடனத்தில் கலக்கி வருவதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்து இருக்கிறார் போட்டியாளர் பஞ்சமி. பார்க்க எப்பொழுதும் சேலையுடன் இருக்கும் பஞ்சமி, பாடல் ஒலிக்கும் வரை அமைதியாக இருப்பார். பாடல் ஒலிக்க ஆரம்பித்தால் நடனத்தில் பத்ரகாளியாக மாறிவிடுவார். இப்படி இருக்க இவருக்கு திருமணமான பின்பு 3 பிள்ளைகள் பிறந்துள்ளது. பின் தனது குடும்ப சூழல் காரணமாக நடனம் ஆட முடியவில்லை என்றும் ஆனால் தற்பொழுது தனது ஆசையை அவரது கணவர் துணையாக நின்று நிறைவேற்றியதாக கூறியுள்ளார். இதனை பார்த்த சரத்குமார் பஞ்சமிக்கு ஷோவின் நடுவில் வீடியோ காலில் வந்து வாழ்த்து சொல்லி, அவரை குடும்பத்துடன் உணவு சாப்பிட தனது வீட்டிற்கு வர வேண்டும் என்றும் கூறி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். இதனை கேட்டு பஞ்சமி அப்படியே கண்கலங்கி அழுத காட்சி அனைவரையும் பரவசமடைய செய்தது.  

இப்படி போன எபிசோடில் சரத்குமார் சொன்னது போல, பஞ்சமியை தனது வீட்டிற்கு அழைத்து அன்புடன் உணவுகளை பரிமாறி அவர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததுடன், பஞ்சமியின் குடும்பத்திற்கு உதவியாக இருக்க ரூபாய் ஒரு லட்சமும் கொடுத்துள்ளார். இந்த நிலையில், 2012ம் ஆண்டில் விக்னேஷ் சிவனின் காதல் நாடகத் திரைப்படமான "போடா போடி" திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகி, சண்டக்கோழி 2 திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும், சர்காரில் நடிகர் விஜய்க்கு வில்லியாகவும் தனது அபார நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இப்படி பார்க்க கோவக்காரி போல் தெரியும் இவர் உண்மையில் தன் வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.


இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் கேமி, முகம் பார்க்கும் கண்ணாடியை பார்த்து உங்கள் வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை குறித்து சொல்லுங்கள் என்று சொன்ன பொழுது, "நான் என் குடும்பத்துடன் வாழ நினைத்தேன் ஆனால் அவர்களுடன் சேர விடாமல் நிறைய பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டேன்" என அழுதபடி கூறினார். இதனை கேட்டு அங்குள்ள அனைவரது கண்களிலும் கண்ணீர் குழம்போல் தேங்கி நிற்க, 

அவரது பேச்சுக்கு பதில் சொல்ல நினைத்த நடுவர் வரலட்சுமி கூறிய வார்த்தையால் அங்குள்ளோர் கண்களில் குழம்போல் தேங்கியிருந்த கண்ணீர் ஆறாக மாறியது. அதில், "வரலட்சுமி, நான் சிறுவயதில் இருக்கும் பொழுது அம்மா அப்பாவிற்கு வேலைகள் அதிகமாக இருப்பதால் என்னை பலரது வீட்டில் விட்டு செல்வார்கள். அப்பொழுது பலரது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன். உங்கள் கதை என் கதை கேமி" என்று கூறியதுடன் "உங்கள் பிள்ளைகளுக்கு தயவு செய்து 'குட் டெச் மற்றும் பேட் டெச்' சொல்லி கொடுங்கள்" என கூற, ஸ்னேகா அவரை கட்டி அனைத்து அழ தொடங்கினார். இந்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் பரவ, வரலட்சுமி மற்றும் கேமி ஆகிய இருவரின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இதையும் படிங்க: மேடையில் கண்கலங்கிய மணிமேகலை...! ஓடி வந்து ஆறுதல் கூறிய பாபா பாஸ்கர்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share