கோடை காலத்தில் குளு.. குளு.. காட்சிகள்..! வெயிலுக்கு இதமாக மனத்திற்கு குளிராக வருகிறது 7 படங்கள்..!
கோடை காலம் முடிவதற்குள் மக்களை மகிழ்விக்க வருகிறது ஏழு படங்கள்.
கோடை வெயில் வந்தால் பின்பாகவே பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் என அனைவருக்கும் ஒருமாத காலம் விடுமுறை வந்துவிடும். இந்த மாதம் முடியும் வரை பல குழந்தைகள் "வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி வெயிலோடு மல்லு கட்டி ஆட்டம் போட்டோமே" என வெயிலுக்கே டஃப் கொடுத்து சுற்றி வருவர்.
சிலர் தனது குடும்பத்துடன் ஊட்டி கொலைக்கானல், ஏற்காடு, கொல்லிமலை என குளிர் உள்ள இடங்களுக்கு செல்வர். இப்படி கோடை காலத்தை மகிழ்ச்சியாக கழிக்க ஆயிரம் வழிகள் இருந்தாலும், அங்கு சென்றும் படம் பார்க்கும் கூட்டம் உண்டு. அப்படி படம் பார்க்கும் உங்களுக்காக இந்த கோடை மாதம் முழுவதும் திரையரங்குகளில் பிசியாக வைக்க வருகிறது ஏழு திரைப்படங்கள்.
கேங்கர்ஸ் - குஷ்பூ சுந்தர் மற்றும் சுந்தர் சி-யின் 'அவ்னி சினிமேக்ஸ்' தயாரிப்பில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில், சுந்தர் சி மற்றும் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நகைச்சுவை கலந்த திரைப்படம் தான் கேங்கர்ஸ். இத்திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
இதையும் படிங்க: மக்களின் ஆதரவுக்கு கிடைத்த வெற்றி "வீர தீர சூரன்"...! வீடியோ வெளியிட்டு நன்றி சொன்ன விக்ரம்..!
ரெட்ரோ - இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 44-வது திரைப்படம் தான் 'ரெட்ரோ.' இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் இசை வெளியிட்டு விழா ஏப்ரல் 18ம் தேதி நடைபெற உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படம் வரும் உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி - நசரத் பாசிலியன், மகேஷ் ராஜ் பாசிலியன் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோரின் தயாரிப்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் நகைச்சுவை, உணர்ச்சி மற்றும் அழகான கதை சொல்லல் ஆகியவற்றை உறுதிபடுத்தும் படம் தான் "டூரிஸ்ட் ஃபேமிலி". இப்படத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப காமெடி டிராமா கதையாக பார்க்கப்படுகிறது. இந்த படமும் சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மே 1ம் தேதி வெளியாக உள்ளது.
டிடி நெக்ஸ்ட் லெவல் - கடந்த ஆண்டு ஜூலை மாதம் இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘டிடி ரிட்டர்ன்ஸ்’. ஹாரர் மற்றும் காமெடி படமாக பார்க்கப்பட்ட இந்தப் படத்தில் சுரபி, ரெடின் கிங்ஸ்லி, ‘லொள்ளு சபா’ மாறன், மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதன் அடுத்த பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை கூறிவந்த விலையில், தற்பொழுது அதற்கான அறிவிப்பு வெளியானது அதன்படி, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனைவரும் எதிர்பார்த்த இந்த படம் மே 16ம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
மாமன் - லார்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள திரைப்படம் தான் 'மாமன்'. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் சூரியை பாராட்ட சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அவரை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இப்படம் நடிகர் சந்தானத்தின் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்துடன் மே 16ல் ரிலீஸ் ஆகி நேரடியாக மோத உள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
சுமோ - வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் ஹோசிமின் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள அட்டகாசமான காமெடி திரைப்படம் தான் "சுமோ". மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியாகிறது.
எஸ் - சத்தமே இல்லாமல் திரில்லர் படமாக வெளியாக உள்ளது ஆறுமுககுமார் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவான 'ஏஸ்' திரைப்படம். இந்த படத்தில் கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் யோகி பாபு, பி.எஸ். அவினாஷ், திவ்யா பிள்ளை, பிருத்விராஜ் மற்றும் ராஜ்குமார் ஆகியோரும் நடித்து இருக்கின்றனர். இந்த படமானது வருகின்ற மே மாதம் 23ம் தேதி வெளியாக உள்ளது.
கோடை கால சிறப்பு படங்களை கண்டு கழியுங்கள்.
இதையும் படிங்க: எனக்கு இசை தெரியாது ஆனால் இசைக்கு என்னை தெரியும்..! இளையராஜாவின் மாஸ் ஸ்பீச்..!