மக்களின் ஆதரவுக்கு கிடைத்த வெற்றி "வீர தீர சூரன்"...! வீடியோ வெளியிட்டு நன்றி சொன்ன விக்ரம்..!
வீர தீர சூரன் பட வெற்றிக்கு மக்களே காரணம். அதனை மறுக்க முடியாது என நடிகர் விக்ரம் வீடியோ வெளியிட்டு நன்றி கூறியிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் "நடிப்பின் அரக்கனாக" வலம் வருபவர் தான் நடிகர் விக்ரம், 1990ம் ஆண்டு "மீரா" என்ற படத்தில் நடித்து அறிமுகமானார். ஆனால் அப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறப்பாக ஓடவில்லை என்றாலும் விக்ரம் தொடர்ந்து வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு நடித்து வந்தார். அதன் பின், 1999ம் ஆண்டு "சேது" என்ற படத்தில் தனது அபார நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் அவருக்கு நல்ல வெற்றியை தேடித்தந்தது.
இதனை தொடர்ந்து, 2001ம் ஆண்டு "தில்" திரைப்படம் வெளியாகி 100கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றிப்படமாக அமைந்தது. பின் மூன்றாவதாக விக்ரம் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளியான "ஜெமினி" பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.
அதன் பின் 2005ம் ஆண்டு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக வெளியான 'அந்நியன்' திரைப்படத்தில் நடித்த விக்ரமின் கேரக்டர் மக்களுக்கு பிடித்து போக அப்படம் வெற்றி அடைந்தது. இதனை தொடர்ந்து, அப்படத்தில் நடித்ததற்காக, பிலிம்பேர் சிறந்த தமிழ் நடிகருக்கான விருதை பெற்றார் நடிகர் விக்ரம்.
இதையும் படிங்க: வெளியானது வீர தீர சூரன் பட மேக்கிங் வீடியோ..! விக்ரமின் நடிப்பை கண்டு மக்கள் மகிழ்ச்சி..!
இதுவரை, என் காதல் கண்மணி, தந்து விட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள், ஹவுஸ் புல், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, சாமுராய், கிங், சாமி, காதல் சடுகுடு, பிதாமகன், தூள், அருள், மஜா, பீமா, கந்தசாமி, மதராசப்பட்டினம், ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, மெரினா, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, ஐ, இரு முகன், சாமி 2, ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், சூரியபுத்ர மகாவீர் கர்ணா, மகான், பொன்னியின் செல்வன் (PS 1), கோப்ரா, பொன்னியின் செல்வன் 2, தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார்.
இதனை தொடர்ந்து, இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து இருக்கும் படம் தான் "வீர தீர சூரன்". இப்படம் இன்று வெளியாக இருந்த வேளையில் ஐகோர்ட் இப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்துள்ளது. படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்படாமல் இருந்ததால், படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று கூறி, பி4யு நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "வீர தீர சூரன் படக்குழு உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிட்டது.
இதனால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டதுடன் நான்கு வாரங்களுக்கு படம் வெளியிடப்படாமல் தள்ளிப்போகும் என கூறப்பட்டது. இதனை அடுத்து, பல சட்ட போராட்டங்களுக்கு பின் படம் வெளியாகிறது என மாலை நேரத்தில் இயக்குனர் அருண்குமார் கூற, மக்கள் அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று படத்தை பார்த்து வெகுவாக பாராட்டி வருகின்றனர். படம் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ட்டாக ஹிட் கொடுத்துள்ளது என சினிமா வட்டாரங்கள் பேச தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் படத்தின் வெற்றியை குறித்து பேசி, தனது எக்ஸ் தளத்தில் வீடியோவாக பதிவிட்டு இருக்கிறார் நடிகர் சீயான் விக்ரம். அதில் "ஒரே ஒரு வாழ்க்கை பிரச்சனையாக மாறுகிறது என ஈசியாக சொல்லலாம்.. ஆனால் அந்த பிரச்சனையை சந்திக்கும் பொழுது மனதிற்கு மிகவும் வேதனையாக இருக்கும். அதே போல் தான் இந்த "வீர தீர சூரன்" திரைபட பிரச்சனை. படம் பிரச்சனையில் உள்ளது என காதுகளில் கேட்கும் பொழுது மிகவும் வருத்தப்பட்டேன். அதை விட என்னுடைய ரசிகர்களுக்காக நான் உழைத்த உழைப்பு அனைத்தும் வீணாக போய்விட்டதே என நினைத்தேன்.
அதுமட்டுமல்லாமல் மக்கள் ட்ரெய்லரை பார்த்து படம் மாஸாக இருக்கும் கண்டிப்பாக வெற்றியடையும் என சொன்னதை கேட்டு மகிழ்ச்சியாக இருந்த எனக்கு பெரிய அடியாக இருந்தது இந்த பிரச்சனை. ஆனால் முதல் மற்றும் இரண்டாம் காட்சிகள் வெளியிடாமல் மாலை வெளியான படம் ஃபிளாப் ஆகிவிடும், நம் உழைப்பு எல்லாம் வீணானது என நினைத்தேன். ஆனால் அதைவிட மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கு சென்று படத்தை பார்த்து ரசித்து வெற்றியடைய செய்து உள்ளீர்கள். உண்மையில் என்னை வீர தீர சூரனாக நடமாட வைத்து இருக்கிறீர்கள். உங்களுக்காக நான் கண்டிப்பாக பல படங்களில் நடிப்பேன். இப்படம் வெற்றியடைய செய்த உங்கள் அனைவருக்கும் நன்றி செலுத்துகிறேன்" என்றார்.
இதையும் படிங்க: துஷாரா விஜயனுடன் நடிக்க தயாராகும் ஆக்ஷன் ஹீரோ.. கதையை கேட்டு ஓகே சொன்ன துஷாரா..!