எனக்கு இசை தெரியாது ஆனால் இசைக்கு என்னை தெரியும்..! இளையராஜாவின் மாஸ் ஸ்பீச்..!
பட டீசர் வெளியீட்டு விழாவில் இளையராஜா பேசிய வார்த்தைகள் ட்ரெண்டாகியுள்ளது.
இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜா தான். "அன்னக்கிளி" என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் 1976 இல் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் இளையராஜா. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 1000த்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார். அதேசமயம், இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான "பத்ம விபூஷண்" விருது 2018ல் இவருக்கு வழங்கப்பட்டது.
இத்தனை பெருமைகளுக்கும்,பாடல்களுக்கும் சொந்த காரனான இவரது பாடல்களை கேட்க முடியும் ஆனால் உபயோகிக்க முடியாது. அப்படி செய்தால் உடனே காப்பி ரைட்ஸ் போடுவார். இசையில் அதிக மென்மையாக இளையராஜாவிடம் பேசும் போது கொஞ்சம் பார்த்தே பேச வேண்டும் என்பர். ஒரு நிகழ்ச்சியில் பாட்டில் லட்சுமியே இல்ல சாமி என ரஜினியிடம் இளையராஜா சொல்ல, பதிலுக்கு ரஜினி அதுதான் லட்சுமி நோட்டா (பணம்) வருதே என சொல்லி கிண்டலடித்து இருப்பர். இது போல நகைச்சுவை உணர்வு கொண்டவர்.
இப்படிப்பட்ட இளையராஜா இதுவரை காயத்திரி, 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள், சட்டம் என் கையில், அவள் ஒரு பச்சை குழந்தை, முள்ளும் மலரும், பைரவி, உதிரிப்பூக்கள், ஆறிலிருந்து அறுபது வரை, அன்னை ஒரு ஆலையம், குரு, நிழல்கள், காளி, நான் போட்ட சவால், நெஞ்சத்தைக் கிள்ளாதே, எல்லாம் உன் கைராசி, மூடு பனி, ஜானி, முரட்டு காளை, மீண்டும் கோகிலா, ராஜ பார்வை, கர்ஜனை, கழுகு, நெற்றிக்கண், அலைகள் ஓய்வதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, தனிகாட்டு ராஜா, மூன்றாம் பிறை, புதுக்கவிதை, எங்கேயோ கேட்ட குரல், பயணங்கள் முடிவதில்லை, சகலகலா வல்லவன், பாயும் புலி, அடுத்த வாரிசு, தங்கமகன், நான் பாடும் பாடல், கை கொடுக்கும் கை, அன்புள்ள ரஜினிகாந்த், தம்பிக்கு எந்த ஊரு, நான் மகான் அல்ல, வைதேகி காத்திருந்தாள், நல்லவனுக்கு நல்லவன், நூறாவது நாள், 24 மணி நேரம், அம்பிகை நேரில் வந்தாள், இதய கோயில் இன்னும் நிறைய படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
இதையும் படிங்க: யாருக்கும் தெரியாத ஷாருக்கானின் குடும்ப ரகசியம்..! அவருக்குள் இப்படி ஒரு வலியா.. புலம்பும் ரசிகர்கள்..!
இப்படி இருக்க, இளையராஜா இசையமைப்பதுடன் மேடை நிகழ்ச்சிகளிலும் இசைகளை ரசிகர்கள் மனதில் அலைபாய விடுவதில் வல்லவர். அப்படிப்பட்ட இளையராஜா சமீபத்தில் லண்டனில் 'சிம்பொனி' இசையை 1½ மணி நேரம் அரங்கேற்றி, ஆசிய கண்டத்திலேயே சிம்பொனியை எழுதி அரங்கேற்றிய முதல் இசையமைப்பாளர் என்ற சாதனை படைத்தார். மேலும், லிடியன் நாதஸ்வரத்தை வைத்து இளையராஜா சிம்பொனி அரங்கேற்ற போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் இசையமைப்பாளர் இளையராஜா, லிடியன் இசையமைத்து காட்டியது சினிமா பிஜிஎம் தான். சிம்பொனி என்றால் என்னவென்று கற்றுக்கொண்டு வா..! என அவருக்கு அறிவுரை வழங்கி தற்பொழுது அனுப்பி வைத்தாக பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சை ஆனது.
இந்த சூழலில், நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இவரது பாடல் அனுமதியின்றி உபயோகிக்கப்பட்டதாக படக்குழுவினர் மீது ரூ.5 கோடி பணம் கெட்டி வக்கீல் நோட்டிஸ் அனுப்பியுள்ளார் இளையராஜா. இந்த நிலையில், சமீபத்தில், பவன் பிரபு இயக்கத்தில், இசையமைப்பாளர் இளையராஜா இசையில், ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடித்த "சஷ்டி பூர்த்தி" என்னும் படத்தின் டீசர் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இப்படி இருக்க இந்த படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டு பேசிய இளையராஜா, "இசை பற்றி தெரியும் என்று நான் எப்பொழுதும் நினைத்ததில்லை. ஆனால் இசைக்கு தான் என்னை தெரியும் என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கு பாடல் எப்படி வருகிறது என்பதே தெரியாது. அது தெரிந்தால் அந்த நொடியிலேயே நான் இசையமைப்பதை நிறுத்தி விட்டுட்டு வேறு வேலை பார்த்து இருப்பேன் என கூறினார்.
இதையும் படிங்க: அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!