கொஞ்சம் அவரை நிம்மதியாக இருக்க விடுங்கள்..! நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!
நடிகர் ஸ்ரீராம் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவரை தனிமையில் இருக்க வைக்க விரும்புவதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
பலரது நினைவுகளில் இருந்து காணாமல் போன நடிகர் ஸ்ரீராம் நடராஜன், கடந்து சில நாட்களாக அனைவரது பார்வையிலும் வந்து செல்கிறார். அந்த அளவிற்கு இன்றைக்கு இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறார் நடிகர் ஸ்ரீ, ஆரம்பத்தில் தனது இன்ஸ்ட்டா கணக்கில் வெறும் 88 ஃபாலோவர்ஸ்களை வைத்திருந்த ஸ்ரீ, அவரது ஆடைகளை விளக்கி பதிவிட்ட போஸ்டுகளுக்கு பின், பல ஃபாலோவர்ஸ்களை இன்று தன் வசம் வைத்திருக்கிறார்.
சினிமாவில் "வழக்கு எண் 18/9" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரீராம், இதனை அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் வெளியான "ஓநாயும் ஆட்டுக்குட்டியும்" என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்ர்டரில் நடித்திருந்தார். அதன்பின், சோன் பப்டி, வில் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
ஆனால் அந்த படங்கள் பெரிதும் வெற்றிபெறவில்லை இருப்பினும் அவரை ரசிகர்கள் ஒருபொழுதும் விட்டுக்கொடுத்ததாக தெரியவில்லை. இதனை தொடர்ந்து முதன்முதலாக லோகேஷ் கனகராஜ், இயக்கிய ‘மாநகரம்’ என்ற திரைப்படத்தில் நடித்திடிருந்த ஸ்ரீ, அதன் பிறகு 'இறுகப்பற்று' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: நயன்தாராவுக்கு போட்டியாக இறங்கிய த்ரிஷா..! 2025ல் பல படங்கள் கைவசம்..!
இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் தனது மிமிக்ரி வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின் மாநகரம் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்த இவரை சினிமாவும் மறந்து மக்களும் மறந்தனர். இதனால் மனஅழுத்ததில் இருந்த இவர் சில வருடங்களாக யாராலும் அறியப்படாத வகையில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. அவரது நண்பர்களிடம் கேட்டால், அவரை எப்பொழுதாவதுதான் சந்திக்க முடியும் எனறும், சில நேரங்களில் தனக்கு வேலை வாங்கி கொடுக்கும்படி கேட்பாராம். உடனே அவருக்கு அட்வைஸ் செய்தால் அங்கிருந்து காணாமல் போய் விடுவார் என கூறியிருக்கின்றனர்.
இந்த சூழலில், அவரது குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‛‛நடிகர் ஸ்ரீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஸ்ரீராம் தற்போது மருத்துவரின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனைப்படி ஓய்வெடுத்து வருகிறார். இதனால் சமூக வலைதளங்களில் இருந்து அவர் சிறிதுகாலம் விலகி ஓய்வெடுத்து வருகிறார் என அவரது நலம் விரும்பிகளான, நண்பர்கள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் அனைவரும் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.
அவரது உடல்நிலைப் பற்றிய வதந்திகள் மற்றும் உறுதி செய்யப்படாத தகவல்கள் பரப்புவதை தயவு செய்து தவிர்க்கும்படி கேட்டு கொள்கிறோம். மேலும், சிலர் ஸ்ரீ பற்றி தெரிவிக்கும் கருத்துக்களை நாங்கள் ஆதரிக்கவில்லை, மறுக்கிறோம். அவர் நல்லபடியாக குணமடைந்து வர வேண்டும். அதுவரை அவரது தனியுரிமையை அனைவரும் மதிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். உங்கள் அன்பு, ஆதரவு மற்றும் புரிதலுக்கு நன்றி'' என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கருப்பு நிற உடையில் இணையத்தை கலக்கும் மதுமிதா..! சீரியலை தொடர்ந்து இன்ஸ்டாவிலும் கலக்கல்..!