×
 

நயன்தாராவுக்கு போட்டியாக இறங்கிய த்ரிஷா..! 2025ல் பல படங்கள் கைவசம்..!

நடிகை திரிஷா இந்த வருடத்தில் தன் கைகளில் வைத்துள்ள படங்களின் லிஸ்டுகள் வெளியாகியுள்ளது.

மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் என்னதான் ஐஸ்வர்யா ராய் நடித்து இருந்தாலும் பெரும்பாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் நடிகை த்ரிஷா மட்டுமே. 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இவர் நடிப்பில் வெளியான சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் உள்ளிட்ட அனைத்து படங்களும் ஹிட் ஆனது. இவரது படங்கள் என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் புத்துணர்ச்சி தான். ஆக விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த '96 திரைப்படம்' மாபெரும் ஹிட்டானது. இந்த படத்தை த்ரிஷாவின் கம்பேக் படமாக பார்த்தனர் தமிழ் ரசிகர்கள். 

இப்படிப்பட்ட நடிகை த்ரிஷா தமிழில் இதுவரை ஜோடி, குஷி, மௌனம் பேசியதே, சாமி, அலை, லேசா லேசா, மனசெல்லாம், எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆய்த எழுத்து, ஜி, ஆறு, திருப்பாச்சி, ஆதி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், கிரீடம், பீமா, வெள்ளித்திரை, குருவி, அபியும் நானும், சர்வம், விண்ணைத்தாண்டி வருவாயா, மன்மதன் அம்பு, மங்காத்தா, என்றென்றும் புன்னகை, சமர், தூங்காவனம், சகலகலா வல்லவன், பூலோகம், என்னை அறிந்தால், கொடி, அரண்மனை 2, நாயகி, மோகினி, 96, பேட்ட, பரமபதம் விளையாட்டு, பொன்னியின் செல்வன் (PS 1), ராங்கி, லியோ, பொன்னியின் செல்வன் 2, தி ரோடு, குற்றப்பயிற்சி, தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), தக் லைஃப், விடாமுயற்சி, குட் பேட் அக்லி உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை த்ரிஷா. 

இதையும் படிங்க: நயன்தாராவுக்கு சுந்தர் சி வைத்த செக்..! மூக்குத்தி அம்மன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர்..!

இப்படி, 21 ஆண்டுகளாக, சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வரும் த்ரிஷா, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல படங்களில் தற்பொழுது பிஸியாக நடித்து வருகிறார். மேலும் அஜித்தின் "குட் பேட் அக்லி" படத்தில் மாஸ் காண்பித்து இருக்கிறார் த்ரிஷா. அதுமட்டுமல்லாமல் தற்போது கமல் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் "தக் லைஃப்" படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஜோடியாகவும் நடித்து முடித்துள்ளார்.

இப்படி இருக்க, ஏற்கனவே இவரது பெயரை வைத்து ரசிகர்கள் "லேடி சூப்பர் ஸ்டார்" பிரச்சனையை கிளப்ப, த்ரிஷா ஒரு போஸ்ட்டில் அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்தார். இந்த சூழலில், நயன்தாரா பத்து படங்கள் இந்த வருடத்தில் நடித்தால் நானும் நடிப்பேன் என களமிறங்கி இருக்கும் நடிகை த்ரிஷா, இந்த ஆண்டில் மட்டும் ஆறு படங்களில் நடித்துள்ளார் என்ற தகவல்கள் கிடைத்துள்ளது. 

அதன்படி, இந்த வருடத்தில் வெளியான நடிகர் அஜித்தின் அட்டகாசமான படமாக பார்க்கப்படும் "விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி" படங்களில் நடித்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இப்படி இருக்க, த்ரிஷா நடிகர் டொவினோ தாமஸ் உடன் நடித்த 'ஐடென்டிட்டி' என்ற மலையாள திரைப்படம் இந்த வருடம் ஆரம்பமான ஜனவரி மாதத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த சூழலில், ஏற்கனவே த்ரிஷாவின் மூன்று படங்கள் வெளியாகியுள்ள நிலையில் அடுத்த முன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

அதில், பிரபல இயக்குனரான மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை தர்ஷா நடித்திருக்கும் திரைப்படம் தான் "தக்லைஃப்" இந்த படம் வருகின்ற ஜூன் மாதம் 5-ம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து, நடிகர் சூர்யாவின்- 45 வது படத்தில் படித்துள்ளார் த்ரிஷா. இந்த படம் தீபாவளிக்கு அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது. மூன்றாவதாக சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடித்துள்ள தர்ஷாவின் விஸ்வாம்பரா படம் இன்னும் இரண்டே மாதங்களில் வெளியாகிறது. 

இந்த நிலையில், இந்த வருடத்தில் மட்டும் நடிகை த்ரிஷாவின் ஆறுபடங்கள் வெளியாக உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: ஒரு மனசாட்சி வேண்டாமா..! நயன்தாரா நடிப்பில் வெளியாக காத்திருக்கும் பல படங்கள்..! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share