×
 

நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது வழக்கு.. மோசடி வழக்கில் சிக்கி கதறல்...!

நடிகர் விஷாலின் தங்கை கணவர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.   

தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு அடுத்து ஆக்ஷன் நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விஷால், இவரது பட டையலாக்குகளில் "நானும் மதுரகாரன் தாண்டா" என்ற ஒற்றை வார்த்தையில் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர். இப்படிப்பட்ட நடிகர் தனுஷ் தனது கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பு நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.

இந்த சூழலில், நடிகர் அர்ஜுன்-யிடம் இருந்து "செல்லமே" திரைப்படத்தில் நடிப்பதற்காக விஷாலுக்கு வாய்ப்பு கிடைத்தது. இத்திரைப்படத்தில் நடித்த பின்னர் இவருக்கு சண்டக்கோழி, திமிரு ஆகிய பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து இவரது படங்கள் அனைத்தும் ஹிட் கொடுக்க படிப்படியாக முன்னேறி இன்று சினிமா சங்கத்தின் தலைவராகவும், அரசியல் தலைவராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

இதையும் படிங்க: பூதாகரமாகும் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு...! தன் உயிருக்கு பாதுகாப்பு தரக் கோரி தந்தை மனு...!

இப்படி இருக்க விஷால் இதுவரை செல்லமே, சண்டைக்கோழி, டிஷ்யூம், திமிரு, சிவப்பதிகாரம், மலைக்கோட்டை, தாமிரபரணி, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, வெடி, அவன் இவன், சமர், தீயா வேலை செய்யணும் குமாரு, பட்டத்து யானை, பாண்டிய நாடு, கதை திரைக்கதை வசனம் இயக்கம்.நான் சிகப்பு மனிதன், பூஜை, பாயும் புலி,தாக்க தாக்க, ஆம்பள, கதகளி, மருது, துப்பறிவாளன், இரும்பு திரை, சண்டகோழி 2, ஆக்‌ஷன், அயோக்யா, எனிமி, சக்ரா, வீரமே வாகை சூடும், லத்தி, மார்க் ஆண்டனி, நாளை நமதே, துப்பறிவாளன் 2, ரத்னம், கருப்புராஜா வெள்ளைரஜா, மத கஜ ராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில், நடிகர் விஷாலின் தங்கயான ஐஸ்வர்யாவுக்கும்  பிரபல நகைக்கடை அதிபரான 'உம்மிடி கிரிட்டிஸ்' என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் நடிகர் விஜய் உள்ளிட்ட நிறைய பிரபலங்கள் பங்குபெற்றனர். இந்த நிலையில், பிரபல நகைக்கடை அதிபருமான உம்மிடி கிரிட்டிஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் வீட்டுக் கடன் பெற உடந்தையாக இருந்ததாக உம்மிடி கிரிட்டிஸ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ரூ.2.5 கோடி பணம் பெற்று மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளார் என்பது சிபிஐ விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் ரூ.5.5 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், இந்த மோசடி தொடர்பாக நில உரிமையாளர், கட்டுமான நிறுவனர், வங்கி அதிகாரிகள், கடன் வாங்கியவர்கள் என 7 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: காட்டூரில் காட்டு ராஜ்ஜியம்… 'அறம்' தவறிப்போனாரா கோபி நயினார்..? 'கொல்லப்படுவேன்' நாடகமா..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share