×
 

பூதாகரமாகும் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு...! தன் உயிருக்கு பாதுகாப்பு தரக் கோரி தந்தை மனு...!

சுஷாந்த் சிங் ராஜ்புத்தினின் மேலாளர் சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு மீண்டும் புகைய தொடங்கியுள்ளது.

நம் அனைவருக்கும் தெரிந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்தின், இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் உருவான திரைப்படமான M.S. தோனி : The Untold Story என்னும் திரைப்படத்தில் நாயகனாக நடித்து தமிழ் மற்றும் இந்திய அளவில் புகழ் பெற்றவர். ஆனால் இவரது திரையுலக பயணமானது 2008-ஆம் ஆண்டு "கிஸ் தேஷ் மெய்ன் ஹை மேரா தில்" என்னும் நாடக தொடரில் ஆரம்பித்தது.

அதன் பின்னர் 2009-ஆம் ஆண்டு "பவித்ரா ரிஷ்ட" , 2010ல் "ஜரா நாசக்கே டிக்க" என பல நாடகங்களில் நடித்து தனக்கென பல ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி பின் வெள்ளித்திரைக்கு வந்தவர். இப்படி கடின உழைப்பாளியான சுஷாந்த் சிங் படிப்படியாக முன்னேற வேண்டும் என பலர் நினைத்து ஆசிர்வாதம் செய்து கொண்டிருந்த வேளையில், 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி இறந்து விட்டதாக செய்திகள் வர, திரைத்துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் துயரத்தில் ஆழ்த்தனர்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணமே கேள்விக்குறியாக இருக்கும் சமயத்தில் அவரது முன்னாள் மேலாளர் 'திஷா சாலியனின்' மரணம் தொடர்பான வழக்கு மீண்டும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அவரது தந்தை மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இவரது திடீர் கோரிக்கையால் ஆதித்யா தாக்கரேவுக்கு பிரச்சனைகள்  அதிகரித்துள்ளது. காரணம் 'திஷா சாலியனின்' மரணம் கொலை என்றும் ஆதித்யா தாக்கரே தான் இந்த கொலைக்கு காரணம் என்றும் பாஜக எம்எல்ஏ நிதேஷ் ரானே கூறி வருகிறார்.

இதையும் படிங்க: காட்டூரில் காட்டு ராஜ்ஜியம்… 'அறம்' தவறிப்போனாரா கோபி நயினார்..? 'கொல்லப்படுவேன்' நாடகமா..?

மகாராஷ்டிராவின் முன்னாள் அமைச்சரான ஆதித்ய தாக்கரே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்தவண்ணம் இருப்பதால், இந்த வழக்கானது ஐபிசி பிரிவுகள் 376, 302, 201 மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வழுத்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், திஷாவின் தந்தை நீதிமன்றத்தில் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதால் அவரது வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

திஷாவின் தந்தை சதீஷுடன் பேச மறுத்து வருவதுடன் தனிமையாக இருக்க விரும்புவதாக கூறிவருகிறார். இந்த நிலையில் இந்த மரண வழக்கில் பாஜக எம்எல்ஏ நிதேஷ் குமார் மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் ஏற்கனவே இருந்தாலும் இந்த கொலையில் ஆதித்யாவின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்களிடம் எழுந்துள்ளன.

அதுமட்டுமல்லாமல், முந்தைய முதலமைச்சரின் மகனைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பான குற்றச்சாட்டுகள் திஷாவின் மரணத்தில் உள்ளன. இதில் புரியாத விஷயம் என்ன வென்றால், ஆரம்பத்தில் திஷா அவரது கட்டிடத்திலிருந்து விழுந்து இறந்ததாகக் கூறப்பட்டது. அதே போல சில நாட்களுக்குப் பிறகு தான் சுஷாந்த் சிங் ராஜ்புத் அவரது வீட்டில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

இதையும் படிங்க: சாமுண்டீஸ்வரி சொன்ன வாரத்தை.. ஏமாற்றத்தில் பரமேஸ்வரி பாட்டி - கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share