×
 

அஜித்தை தோற்கடித்த "குட்டி தல"...! ரேஸில் அஜித்தை திணறவிட்ட ஆத்விக்...!

கார் ரேஸில் அஜித்தை தோற்கடித்து இருக்கிறார் அவரது மகன் ஆத்விக்.

கோலிவுட் மற்றும் பாலிவுட்  நடிகர்களில் தங்களுக்கு பிடிப்பதை செய்யும் நடிகர் வரிசையில் என்றும் நம்பர் ஒன்னாக இருப்பவர் நடிகர் அஜித். இவர் தனது நடிப்பில் ஒரு புறம் ஆர்வத்தை காட்டினாலும் மறுபுறத்தில் கார் ரேஸ்களிலும், உலகம் சுற்றும் வாலிபனாக இன்றும் தனது bmw பைக்கை எடுத்துக் கொண்டு மலைகள் முதல் குன்றுகள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணம் செய்து தன் வாழ்க்கையை இனிமையாக கழித்து வருகிறார். ஆனால் இப்படிப்பட்டவரை பிடிப்பது, அனைத்து இயக்குநர்களுக்கும், ரசிகர்களுக்கும் பெரிய சவாலாகவே உள்ளது.

இந்த சூழலில், ரசிகர்களின் பல வருட போராட்டங்களுக்கு பின் வெளியான திரைப்படம் தான் அஜித்தின் "விடாமுயற்சி". இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்குகளில் ஓடவில்லை என்றும் ஓடிடியிலும் பெரிதாக வரவேற்பு இல்லை எனவும் இப்படத்தால் தங்களுக்கு ரூபாய் 128 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லைக்கா நிறுவனம் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: படக்குழுவுக்கு அஜீத் போட்ட அதிரடி ரூல்... அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

இதனை தொடர்ந்து, மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா நடித்துள்ள படம் தான் "குட் பேட் அக்லி". விடாமுயற்சியை விட இப்படம் மிகவும் அருமையாகவும் மாசாகவும் இருக்கும் என ரசிகர்கள் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த சூழலில் இப்படத்தின் ப்ரீ புக்கிங்கில் இதுவரை ரூ1.5 கோடி வரை வசூல் செய்துள்ளது. இன்னும் படம் வெளியாக 7 நாட்களே உள்ள நிலையில் இப்படம் வசூலில் சாதனை படைக்க தயாராகி இருக்கிறது.   

இப்படி இருக்க, சமீபத்தில் நடிகர் அஜித்குமார், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வருகிறார். ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். 

இந்த வெற்றியை தமிழ் நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர். மேலும், துபாய் கார் பந்தயத்தை தொடர்ந்து ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற்று வரும் கார் பந்தயங்களில் தனது அணியுடன் நடிகர் அஜித் கலந்து கொண்டு, ரேசில் தனது முழு முயற்சியையும் கொடுத்து வருகிறார். 

இப்படி ரேஸிங்கில் முழு கவனத்தையும் செலுத்தி வரும் நடிகர் அஜித், அவ்வப்போது துபாய்க்கு சென்று கார் ரேஸுக்காக பயிற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அஜித் நான் மட்டும் ஜெயித்தால் போதாது எனது மகனும் கார் ரேஸில் ஜெயிக்க வேண்டும் என நினைத்து தனது மகன் ஆத்விக்கிற்கு ரேஸ் கார் ஓட்டுவதில் பயிற்சி கொடுத்து வருகிறார். சென்னையில் "கோ கார்ட் ட்ராக்கில்" தனது மகனை ரேஸ் கார் ஓட்ட வைத்து இருக்கிறார் அஜித். சிறிது நேர பயிற்சிக்கு பின்னர் காரை எடுத்த அவரது மகன், சிறிது தொலைவில் அவரை கிராஸ் செய்து வெற்றி கண்டார்.

இந்த புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் படத்தை பின்னுக்கு தள்ளிய விடாமுயற்சி.. ஓடிடியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வெற்றி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share