லக்கி பாஸ்கர் படத்தை பின்னுக்கு தள்ளிய விடாமுயற்சி.. ஓடிடியில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து வெற்றி..!
விடாமுயற்சி ஓடிடியிலும் வெற்றி அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
1990களில் வங்கி கணக்குகளை பயன்படுத்தி, வங்கி ஊழியர் எப்படி பணம் சம்பாதிக்கிறார் என்பதை குறித்தும், வறுமையில் இருக்கும் தனது குடும்பத்தை மீட்க என்ன செய்தாலும் தவறு இல்லை என்பதை காண்பிக்கும் வகையிலும் அமைந்த திரைப்படம் தான் "லக்கி பாஸ்கர்", இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதி இந்தியா முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகி, வசூலில் ரூ.100 கோடியை கடந்து ஃபாக்ஸ் ஆபிஸில் இடம் பெற்று வெற்றி படமாக மாறியது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி "லக்கி பாஸ்கர்" படம் நெட்பிளீக்சில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து முதல் வாரத்தில் இருந்து netflix "top 10" ட்ரெண்டிங் படங்களில் இடம் பெற்ற "லக்கி பாஸ்கர்" திரைப்படம். தொடர்ச்சியாக 13 வாரங்களையும் கடந்து டாப் 10 இல் இருக்கும் முதல் தென்னிந்திய திரைப்படம் என படத்தை தயாரித்த சீராதா என்டர்டைன்மென்ட்ஸ் தனது எக்ஸ் தலத்தின் மூலம் தெரிவித்து இருந்தனர்.
இதையும் படிங்க: 'விடாமுயற்சி' யாரும் பார்த்திடாத த்ரிஷாவின் BTS போட்டோஸ்!
இதனை தொடர்ந்து, லைகா புரொடக்சன்ஸ் சார்பாக சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிபில், மகிழ் திருமேனி எழுத்து இயக்கத்தில், அஜித் குமார், திரிசா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் ஆகியோர் நடிப்பில் கடந்த மாதம் பிப்ரவரி 6 அன்று வெளியான திரைப்படம் "விடாமுயற்சி".
படத்தின் தலைப்புக்கு ஏற்ப ரசிகர்களின் விடாமுயற்சி கேள்விகளாலும், விடாமுயற்சியின் பலனாக வெளியான திரைப்படம். அதுமட்டும் அல்லாமல் படத்தின் தலைப்புக்கு ஏற்ப, நடிகர் அஜித் குமார் காரை வைத்து ஸ்டண்ட் செய்த காட்சிகள் இணையத்தில் பரவி படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது. பின் படம் வெளியாகி உலகளவில் இதுவரை ரூ.150 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மார்ச் 3 அன்று "விடாமுயற்சி" திரைப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தியேட்டர்களில் படத்தை கொண்டாடிய ரசிகர்கள், ஓடிடி-யிலும் இப்படத்தை பார்த்து கொண்டாடி வருகின்றனர்.இப்படி இருக்க படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரே நாளில் இந்திய அளவில் நம்பர் 1 இடத்தை பெற்றுள்ளது விடாமுயற்சி திரைப்படம்.
இதனை பார்த்த ரசிகர்கள் விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: விஜய்யை சீண்டும் விடாமுயற்சி...! அஜித் ரசிகர்கள் செய்த அரசியல் விமர்சனம்...!