×
 

அமீர் கான் மூன்றாவது திருமணத்தில் சிக்கல்... வம்பிழுத்து அழுது சென்ற இரா கான்...!

அமீர்கானை நேரில் சந்திக்க சென்ற அவரது மகள் அழுதபடி சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்  தொகுப்பாளராக இருந்து, பின் நடிகராக தோன்றி அதன் பின் திரைப்பட தயாரிப்பாளர் என்ற அங்கிகாரத்துடன் வாழ்பவர் தான் ஆமிர் கான். பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான்கான், வரிசையில் என்றும் நிலைநிற்பவர் தான் அமீர்கான். ஏனெனில் அவர்களது வரிசையில் மிகவும் திறமையான நடிகராக இன்றும் திகழ்ந்து வருகிறார்.

இவர் 1973ம் ஆண்டு "யாதோன் கி பாரத்" என்ற திரைபடத்தில் குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் இவரது நண்பரும் இயக்குநருமான அசுதோஷ் கோவரிகருடன் இணைந்து 1984ம் ஆண்டு "ஹோலி" என்ற படத்தில்துணை கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதைத் தொடர்ந்து, 1988ம் ஆண்டில் "கயாமத் சே கயாமத் தக்" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் அமீர்கானுக்கு தேடி தந்தது. அடுத்ததாக "ராக்" படத்தில் சிறப்பாக நடித்து 'தேசிய திரைப்பட விருதை' பெற்றார். மிக குறுகிய கால நடிப்பின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஸ்டாராக மாறிய பெருமை அமீர் கானையே சேரும். 

இதையும் படிங்க: குஷ்பூ செய்த செயலால் இயக்குனரான நபர்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து...!

அதன் பிறகு, 1990ம் ஆண்டு "தில்", 1991ம் ஆண்டு "தில் ஹை கே மந்தா நஹின்", 1992ம் ஆண்டு "ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர்", 1993ம் ஆண்டு "ஹம் ஹெய்ன் ரஹி பியார் கே", அதே வருடம் மீண்டும் "பரம்பரா", 1994ம் ஆண்டு "அண்டாஸ் அப்னா அப்னா", 1995ம் ஆண்டு "பாஸி", அதே வருடம் மீண்டும் "ரங்கீலா" மற்றும் "டிராஜானி",1997ம் ஆண்டு "இஷ்க்",1998ம் ஆண்டு "எர்த்"மற்றும் "குலாம்",1999ம் ஆண்டு  "சர்பரோஷ்",2001ம் ஆண்டு"தில் சஹ்தா ஹை", 2001ம் ஆண்டு "லகான்", 2005ம் ஆண்டு "மங்கள் பாண்டே", 2006ம் ஆண்டு "ஃபனா" மற்றும் "ரங் தே பசந்தி" மற்றும் தங்கல் உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தவர். 

2007 ஆம் ஆண்டு, அமீர் கான் "தாரே ஜமீன் பர்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையும் தந்தது. இதனை தொடர்ந்து, லகான், தில் சாஹ்தா ஹை, ஜோ ஜீதா வோஹி சிக்கந்தர் மற்றும் அந்தாஸ் அப்னா அப்னா போன்ற அவரது பல படங்கள் பாரம்பரியமிக்க படங்களாகக் கருதப்படுகின்றன. 

இப்படி இருக்க, அமீர்கான், அவரது முதல் மனைவியான ரீனா தத்தை டிசம்பர் 2001ம் ஆண்டு விவாகரத்து செய்து, டிசம்பர் 2005 இல் "கிரண் ராவை" இரண்டாவதாக திருமணம் செய்தார். பின் 2021ம் ஆண்டு அவரையும் விவாகரத்து செய்ய போவதாக அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் அமீர் கானுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த சூழலில், சில நாட்களுக்கு முன் தனது புதிய காதலியை அனைவருக்கும் அறிமுகம் செய்த அமீர்கான், 6 வயது குழந்தைக்கு தாயாக உள்ள "கௌரிஸ் ஸ்பிராட்" என்பவரை காதலித்து வருவதாகவும் கூடிய விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள போவதாகவும் கூறியிருந்தார். 

இப்படி அவர் குடும்பத்தில் மூன்றாவது திருமண காரியங்கள் குறித்து முடிவெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. காரணம் அமீர்கானை சந்திக்க சென்ற அவரது மகள் இராகான்,திரும்பி செல்லும் பொழுது காரில் அழுதுகொண்டே சென்றுள்ளார்.இந்த காட்சிகள் தற்பொழுது இணையத்தில் உலாவர தொடங்கியுள்ளது. 

இதையும் படிங்க: தனது மனைவியின் பிறந்த நாளுக்கு வெற்றிமாறன் கொடுத்த பரிசு..! ஷாக்கான அவரது மனைவி ஆர்த்தி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share