குஷ்பூ செய்த செயலால் இயக்குனரான நபர்.. ஒரே கையெழுத்தில் மாறிய தலையெழுத்து...!
நடிகை குஷ்பூ இரண்டாவதாக தொடங்கியுள்ள நிறுவனத்தால் ஒருவருக்கு கிடைத்துள்ளது இயக்கம் வாய்ப்பு.
தமிழகம் மட்டும் இல்லாது இந்தியா முழுவதும் "குஷ்பூ இட்லியும்...கொத்தமல்லி சட்னியும் கொடுங்கள்" என்று சொல்லும் அளவிற்கு மிகவும் பிரபலமானவர் தான் நடிகை குஷ்பூ. இவர் வெள்ளித்திரையில் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என்ற முகமும், சின்னத்திரையில் சீரியலில் கதாநாயகியாக ஒரு முகமும், அரசியலில் சிங்கத்தை போன்ற கர்ஜனையுள்ள முகம் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகை குஷ்பூ. அன்றும் இன்றும் என்றும் நடிப்பில் குஷ்பூவை மிஞ்ச ஆளே இல்லை, இவரது நடிப்பு மிகவும் குழந்தை தன்மையாக இருக்கும். இவர் ஒரு படத்தில் "அய்யோ அம்மா குழந்தை பிறக்க போகுது" என்று சொல்லும் டயலாக்குகள் மிகவும் அழகாக இருக்கும்.
அதே போல் நடிகர் கமல்ஹாசனுடன் "சிங்காரவேலன்" திரைப்படத்தில் மிகவும் பிறமாதமாக நடித்திருப்பார். அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் "மன்னன்" மற்றும் "அண்ணாமலை" திரைப்படத்தில் அழகான கதாநாயகியாக தோன்றி அனைவரையும் ஷாக்காக வைத்திருப்பார். இப்படி பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பூ நடித்தாலும், இன்று எப்படி நடிகர் கார்த்திக்கிற்கு ஜோடி தமன்னா எனவும், விஜய்க்கு ஜோடி திரிஷா எனவும் சூர்யாவுக்கு ஜோடி ஜோதிகா எனவும் சினிமாவில் கூறுகின்றனரோ அதே போல் ஒருகாலத்தில் சினிமா துறையில் குஷ்பூ என்றால் பிரபு தான். இவர்கள் இருவரது காம்போ மிகவும் அழகாக இருக்கும்.
இதையும் படிங்க: குஷ்பூவுக்காக 'மொட்டை பாஸ்' ஆக மாறிய சுந்தர்.சி...! மனைவிக்காக சிறப்பு வேண்டுதல்..!
இப்படி பல முன்னணி நடிகர்களுடன் ஆடி, பாடி, ஜோடியாக நடித்த குஷ்பூவின் ஆரம்ப வாழக்கை 1980களில் ஆரம்பித்தது. அப்பொழுதே குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கிய குஷ்பூ, 1989ம் ஆண்டு "வருஷம் 16" என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதன் பின், தர்மத்தின் தலைவன், கிழக்கு வாசல், மைக்கேல் மதன காமராஜன், சின்ன தம்பி, பிரம்மா, நாட்டுக்கு ஒரு நல்லவன், மன்னன், பாண்டியன், சிங்காரவேலன், அண்ணாமலை, புருஷலட்சணம், கேப்டன் மகள், நாட்டாமை, முறை மாமன், முத்து குளிக்க வாரீயளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வீரம் வெளஞ்ச மண்ணு, மின்சார கண்ணா, உன்னை தேடி,சுயம்வரம், அலைபாயுதே, உன்னை கண் தேடுதே, விண்ணுக்கும் மண்ணுக்கும்,கிரி, ஜூன் ஆர், பெரியார், பழனி, ஐந்தாம் படை, வில்லு, யாவரும் நலம், போன்ற படங்களில் நடித்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், தீயா வேலை செய்யணும் குமாரு, ஆம்பள, கலகலப்பு 2, டிராபிக் ராமசாமி, நட்பே துணை, அரண்மனை 3, பட்டாம்பூச்சி, காப்பி வித் காதல், அரண்மனை 4, கேங்கர்ஸ் போன்ற படங்களை தயாரித்தும் இருக்கிறார். இதற்கிடையில் இயக்குனர் சுந்தர் சி-ஐ திருமணம் செய்தார். இப்படி இருக்கும் நடிகை குஷ்பூ, ஏற்கனவே "அவ்னி சினிமேக்ஸ்" என்ற தயாரிப்பு நிறுவனத்தில் மேற்கண்ட திரைப்படங்களை தயாரித்து வழங்கினார்.
இப்படி இருக்க, தற்போது 2வதாக புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். அதற்கு "அவ்னி மூவிஸ்" என்று பெயரை வைத்த குஷ்பூ தற்போது "பென்ஸ் மீடியா"வுடன் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான 'அஸ்வின் கந்தசாமி' இயக்குகிறார். மேலும் இப்படத்தில் ஹீரோவாக நடிகர் சந்தோஷ் நடிக்க இருக்கிறார். காதல், ரொமான்ஸ், சண்டை, காமெடி என சிறந்த கலவையில் குறுகிய பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. தற்போது இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டாரெல்லாம் கிடையாது.. ரஜினி மட்டும் தான் சூப்பர் ஸ்டார்.. குஷ்பூ காட்டம்..!