×
 

ஆடை சுதந்திரம் தேவை தான்.. அந்த ஆடையால் அசிங்கப்பட்டு இருக்கிறேன்.. காட்டமாக பதிலளித்த சினேகா..! 

தனது உடையை வைத்து தன்னை அசிங்கப்படுத்தியதாகி கூறியிருக்கிறார் நடிகை சினேகா.

"பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்" என்ற பாடலையும் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே" என்ற பாடலையும் இன்றளவு கேட்டாலும் உடனே நினைவுக்கு வருகிறவர் நடிகை ஸ்னேகா. ரம்பா 'தொடையழகி' என்றால் அப்பொழுதே 'சிரிப்பழகி' என்ற பட்டத்தை பெற்றவர் நடிகை ஸ்னேகா. குஷி படத்தில் எப்படி "அவ சிரிச்சா சிரிப்புல நூறு பேரு செத்து போயிட்டான்" என்ற பாடல் வரிகள் வருகிறதோ அந்த வரிகளுக்கு உண்மையான சொந்தக்காரர் தான் 'நடிகை ஸ்னேகா'. இப்படி படங்களிலும் நடனத்திலும் அசத்திய ஸ்னேகா தற்பொழுது  டான்ஸ் நிகழ்ச்சிக்கு நடுவராக அசத்தி வருகிறார். 

நம் அனைவருக்கும் சினேகா என்று அறியப்படும் இவரது உண்மையான பெயர் "சுகாசினி இராசாராம் நாயுடு". இன்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்னேகாவின் ஆரம்ப திரையுலக வாழ்க்கை மலையாள படத்தில் தோன்றியது. கடந்த 2001ம் ஆண்டு "இங்கே ஒரு நீலப்பக்சி" என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின் குடும்ப பாங்கான இவரது முகத்தையும் நடிப்பையும் பார்த்து, 2001ம் ஆண்டு "என்னவளே" என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து  தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களில் நடித்தும் வருகின்றார். 

இதையும் படிங்க: முன்னாள் காதலை நினைவு கூற தயாரா..? கோடை காலத்தில் கண்ணீரில் நனைக்க வருகிறது "ஏஐ ஆட்டோகிராப்" படம்..!

இதுவரை என்னவளே, பார்த்தாலே பரவசம், பம்மல் கே. சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், உன்னை நினைத்து, கிங், வசீகரா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், ஜனா, ஆட்டோகிராஃப், சின்னா, புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், நான் அவன் இல்லை, பிரிவோம் சந்திப்போம், இன்பா,  பாண்டி, சிலம்பாட்டம், தீராத விளையாட்டுப் பிள்ளை, அங்காடித் தெரு, கோவா, ஒரு கல் ஒரு கண்ணாடி, முரட்டு காளை, ஹரிதாஸ், உன் சமையலறையில், ஜே கே என்னும் நண்பனின் வாழ்கை, வேலைக்காரன், குருக்ஷேத்திரம், வினய விதேய ராமா, பட்டாஸ், தி கிரேட்ஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்), வான், டிராகன் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார் நடிகை ஸ்னேகா. 

இப்படி 2000த்தில் தனது திரையுலக பயணத்தை ஆரம்பித்த ஸ்னேகா 2025 வரையிலும் வருடம் தவறாமல் படத்தை நடித்து வந்தாலும், அனைவரது நினைவிலும் மிகவும் பிடித்த படம் என்றால் இவர் கமல்ஹாசனுடன் நடித்த "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் மற்றும் மற்றும் பம்மல் கே. சம்பந்தம்" இப்படங்களில் தனது நகைச்சுவை திறனை அற்புதமாக வெளிக்காட்டி இருப்பார். இத்தனை படங்களை நடித்து இருந்தாலும் இதுவரை ஒரு விருதுகளையும் வாங்காத ஸ்னேகா தனது திரையுலக வாழ்க்கையில் மக்களிடம் இருந்து நிறைய விருதுகளை அன்பால் பெற்று இருக்கிறார்.

இந்த நிலையில், நடிகை ஸ்னேகா தனது உடையால் அசிங்கப்படுத்தப்பட்டு இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் அவர், நான் ஒருமுறை பயன்படுத்திய ஆடையை மறுபடியும் அணிய மாட்டேன். என்ன காரணம் என கேட்டால், சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றேன். அப்பொழுது ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிந்து இருந்தேன்.

இதனை கவனித்த ஒரு மீடியா, அவர்களது பக்கத்தில் "சினேகாவிடம் உடை இல்லை, அதனால் போட்ட ஆடையை மீண்டும் அணிந்து வருகிறார்" என எழுதினார்கள். இதனை பார்த்து மிகவும் வியப்பான நான், அன்று முதல் இன்று வரை, ஒருமுறை அணிந்த உடையை மீண்டும் அணிவதே இல்லை. அதுமட்டுமல்லாமல் நான் எடுப்பது அனைத்துமே விலையுயர்ந்த ஆடைகள், ஆனால் ஒருமுறை அணிந்துவிட்டால் நண்பர்களுக்கோ, தேவை படுபவர்கள் யாருக்காவது கொடுத்துவிடுவேன் என கூறியுள்ளார்.


இதனை பார்த்த நெட்டிசன்கள், ஆனா நாங்க அப்படி இல்ல, வருஷத்துக்கு ஒரு ட்ரெஸ் எடுப்போம் ஆனா அதையே புதுசு போல வைத்திருப்போம். அதே போல் நகையை குறித்து எழுதியிருந்தால் ஒரு முறை பயன்படுத்திய நகையை மீண்டும் அணியாமல் இருந்திருப்பிங்களா? வெளிய இருக்கவங்க சொல்வதற்காக நம்மை நாம் என்றும் மாற்றி கொள்ள கூடாது சினேகா பாத்துக்கோங்க. என பதிவிட்டு வருகினறனர்.   

இதையும் படிங்க: சமந்தா சென்ற சோலோ ட்ரிப்...! பெண் சிங்கம் சிங்கிளாக வலம் வந்த புகைப்படம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share