நீதிபதி மகன் என்றால் இப்படி பண்ணலாமா..! தர்ஷனுக்காக களமிறங்கிய முன்னாள் காதலி..!
தர்ஷன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது முன்னாள் காதலி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவருக்கும் பிடித்த சீசன் என்றால் அது நடிகர் கவின் இருந்த சீசன் 3 தான். அதற்கு பின்பு வந்த சீசன்கள் எல்லாம் பெரிதாக ஓடவில்லை. இதில் வனிதா, அபிநயா, ஸ்ருஷ்டி, ஷெரின், சேரன் என பல ஜாம்பவான்கள் இருந்தாலும் அவர்களை உடைத்து எறிந்த சிறுசுகளாக வலம் வந்தவர்கள் தான் "கவின், சாண்டி, லாஸ்லியா, முகின் ராவ் மற்றும் தர்ஷன்" இவர்கள் ஐந்து பேரும் இணைந்து அந்த வீட்டில் பஞ்சபாண்டவர்களாய் "வீ ஆர் தி பாய்ஸ்" என வலம் வந்து தனக்கென பல ரசிகர்களை பெற்றனர்.
இப்படி இருக்க, பிக்பாஸுக்கு பின்பு வெளியே எங்கும் தர்ஷனை பெரிதளவில் பார்க்க முடியவில்லை. இந்த நிலையில் தற்பொழுது நடந்த சிறு தகராறில், இன்று அனைவரது பார்வையிலும் தென்பட்டு இருக்கிறார் தர்ஷன். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான பார்க்கிங் படத்தில் ஹரிஷ் கல்யாண் , எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருப்பர்.
இப்படத்தில், இளம் ஐடி ஊழியரான ஈஸ்வர் சென்ற வாடகை வீட்டில் அவருக்கும் எம்.எஸ். பாஸ்கருக்கும் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட சண்டை பின்பு கொலை செய்யும் அளவிற்கு மாறி இருக்கும். இப்படம் வந்த பொழுது அனைவரும் இப்படி தான் பல வீடுகளில் நடந்து வருகிறது என கூறி வந்தனர். இந்த நிலையில் தற்பொழுது அதே போன்ற சம்பவத்தில் சிக்கி இருகிறார் பிக்பாஸ் தர்ஷன்.
இதையும் படிங்க: தனிமையில் பிறந்த நாள் கொண்டாடிய லாஸ்லியா..! குட்டி கேக்குடன் ஹாப்பி பர்த்டே பாடி மகிழ்ச்சி...!
சென்னை முகப்பேர் கிழக்கு பாரிசாலை பகுதியில் உள்ள லோகேஷ் என்பவரின் வீட்டில் பிக்பாஸ் நடிகர் தர்ஷன் குடியிருந்து வருகின்றார். இந்த சூழலில் இரவு நேரத்தில் நடிகர் தர்ஷன், ஜிம்முக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி இருக்கிறார். அப்பொழுது அவரது வீட்டு வாசலை மறித்து கார் ஒன்று நின்றது. அந்த கார் யாருடையது என்பது தெரியாததாலும், வீட்டிற்குள் தங்கள் காரை கொண்டு செல்ல முடியாததாலும் தர்ஷனும், அவரது தம்பி லோகேஷும், சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வீட்டு வாசலில் டென்சனாக நின்று கொண்டு இருந்துள்ளனர்.
இதனை அடுத்து, அவரது வீட்டின் அருகே உள்ள டீக்கடைக்கு சென்று, தங்கள் வீட்டு வாசலில் நிற்கும் கார் யாருடையது என இருவரும் கேட்டுள்ளனர். அதற்கு, அங்கு குடும்பத்துடன் டீ அருந்திக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர், கார் தங்களுடையது தான் என்றும் டீ குடித்து விட்டு வந்து எடுப்பதாகவும் கூறி உள்ளார். ஏற்கனவே தாங்கள் நீண்ட நேரம் காத்திருப்பதாகவும், காரை எடுத்து வேறு இடத்தில் நிறுத்தி விட்டு செல்லுங்கள் என்றும் தர்ஷன் கூறியுள்ளார்.
இதனால் கடுப்பான குடும்பத்தினர், தர்ஷனுடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி போக, காரை எடுக்க மறுத்த அந்த இளைஞரை தர்ஷனும், அவரது தம்பி லோகேஷும் சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்ததாகவும், தடுக்க வந்த அவரது மனைவியையும், மாமியாரையும் கையை முறுக்கி தாக்கி தள்ளி விட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த செயல் அப்பகுதியில் பூதாகரமாக, குடும்பத்துடன் அடிவாங்கிய நபர் யார் என விசாரித்ததில் அவர், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கயல்விழியின் மகன் ஆதிச்சூடி என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து, சண்டையில் காயம் அடைந்த நீதிபதியின் மகன் ஆதிச்சூடி, அவரது கர்ப்பிணி மனைவி லாவன்யா, மாமியார் மகேஸ்வரி ஆகியோர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், இரு தரப்பிலும் இருந்து ஜெ.ஜெ நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆதிசூடி, கர்ப்பிணியாக உள்ள தனது மனைவி விரும்பிக்கேட்டுக் கொண்டதன் பெயரில், வெளியில் அழைத்து வந்ததாகவும், வழியில் மனைவி ஆசைப்பட்டு கேட்டதால் டீ குடிக்க சென்றதாகவும், அதற்குள்ளாக காரை எப்படி நிறுத்தலாம்? என்று கேட்டு தர்ஷன் தாக்கியதாகவும் தெரிவித்தார்.
அதே நேரத்தில் காரை எடுக்கச்சொல்லிய போது, அந்த இளைஞர் தன்னை நீதிபதியின் மகன் எனக்கூறி மிரட்டியதாகவும், வாக்குவாதம் ஏற்பட்டதால் உடன் இருந்த இளைஞரின் மனைவி தங்கள் மீது டீ யை ஊற்றியதாகவும், இளைஞர் தாக்கியதில் தனது பனியன் கிழிந்தாகவும், நடிகர் தர்ஷன் தெரிவித்தார். இதையடுத்து தர்ஷன், லோகேஷ் ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டடு உள்ளது. மேலும், நீதிபதியின் மகன், ஆதிச்சூடி, மருமகள் லாவண்யா, மாமியார் மகேஸ்வரி மீது கையால் தாக்கி ஆபாசமாக பேசியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இரு தரப்பிலும் வழக்கு பதிவு செய்தாலும் போலீசார் தர்ஷன், லோகேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த பிரச்சனை தற்பொழுது பூதாகரமாக, சிலர் தர்ஷனுக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர். இந்த சூழலில், பல வருடங்களுக்கு முன்பு பிக் பாஸ் தர்ஷன் மற்றும் நடிகை சனம் ஷெட்டி இடையே நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், பிக் பாஸ் சென்று வந்த பிறகு தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக சனம் ஷெட்டி போலீசில் புகார் அளித்து, அது பெரிய சர்ச்சையாக மாறியது அனைவருக்கும் தெரியும்.
இந்த நிலையில், தர்ஷன் பார்க்கிங் பிரச்சனையில் கைதாகி இருப்பது பற்றி அவரது முன்னாள் காதலியான சனம் ஷெட்டி ஒரு வீடியோ பதிவை தனது இன்ஸ்ட்டா தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில், தர்ஷன் கைது செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலை கேட்டதும் எனக்கு ஒரு நொடி பொழுதில் சந்தோசமாக இருந்தது. ஆனால் தர்ஷன் இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் நான் என்ன செய்திருப்பேன் என யோசித்தேன். விசாரணை கூட நடத்தாமல் ஒரு தரப்பு மீது மட்டும் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
அதுவும் வெள்ளிக்கிழமை கைது செய்திருக்கிறார்கள். விசாரணையே திங்கள் அன்று தான் நடக்கும். "ஹாஸ்பிடலில் இருந்து பேட்டி கொடுத்த நீதிபதி மகன் சொல்வது தான் உண்மை என்றால் சிசிடிவி காட்சியை வெளியிட்டு இருக்கலாமே. தப்பு பண்ணாதவங்க தண்டனை அனுபவித்தால் அது மிகப்பெரிய குற்றம்" என சனம் ஷெட்டி தற்போது தர்ஷனுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.
இதையும் படிங்க: Kayadu Lohar: மேக்கப் போடாமல் கூட இம்புட்டு அழகா? கயாடு லோஹர் கியூட் போட்டோஸ்!