கடவுளிடம் வேண்டுதல் வைத்த மணிமேகலை..! தொகுப்பாளினி ஆசையை நிறைவேற்ற படையெடுக்கும் ரசிகர்கள்..!
பிரபல நிகழ்ச்சியில் தனது ஆசையை பகிர்ந்த மணிமேகலையின் வீடியோ வைரல்.
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக இன்றும் கலக்கி வருபவர் மணிமேகலை. பார்க்க குழந்தை போல் இருந்தாலும் இவரது உழைப்பு என்பது மதிக்கத்தக்கதாக இருக்கும். அப்படி சாதாரண குடும்ப பின்புலத்தை கொண்ட மணிமேகலை, 2018ம் ஆண்டு துணை நடன இயக்குனர் ஹுசைனை காதலித்து பெற்றோரின் சம்மதத்தை மீறி திருமணம் செய்தார். அதன்பின் இனி நம் வாழ்க்கை நன்றாக இருக்க போகிறது என நினைத்தவர்களுக்கு அடி மேல் அடி விழுந்தது.
அதன் முதல் படியாக, தனது ஆசை காதலனை திருமணம் செய்ய தந்தையின் உறவை பறிகொடுத்தார். பிறகு, தனது கணவருக்காக ஆசையாக வாங்கி கொடுத்த பைக்கை திருடனிடம் பறிகொடுத்தார். அதன் பின் தனது குடும்பத்திற்காக ஆசையாக வாங்கிய காரை பணம் கட்ட முடியாததால் வங்கி ஊழியரிடம் பறிகொடுத்தார்.
வீடு வாசல் என அனைத்தையும் இழந்து தெருவில் நின்றார் மணிமேகலை. குடும்பத்தினர் முதல் சமூகத்தில் உள்ள அனைவரது பார்வையிலும் ஏளனமாக்கப்பட்டார். இதனால் மனமுடைந்த மணிமேகலை தனக்கு வந்த சோதனையை சாதனையாக மாற்ற நினைத்து அதிரடியாக போராட ஆரம்பித்தார் .
இதையும் படிங்க: ரெட் கார்டு விவகாரம்...! உண்மையை உடைத்து சர்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரவீனா..!
அவரது நீண்ட நாள் போராட்டத்திற்கு பலனாக, இழந்த வீட்டிற்கு பதிலாக இரண்டு வீடு, இழந்த காருக்கு பதிலாக விலையுயர்ந்த கார், இழந்த உறவுகளுக்கு பதிலாக நல்ல கணவர், என அனைத்திலும் சாதித்து முன்னேறி வந்தார். இந்த சூழலில், "குக் வித் கோமாளி" என்ற நிகழ்ச்சி அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது. அதில் கோமாளியாக அவதாரம் எடுத்தவர் பின் அதே "குக் வித் கோமாளியின் தொகுப்பாளராக களம் இறங்கி அனைவருக்கும் பிடித்த மணிமேகலையாக மாறினார்.
இப்படி சிங்கபெண்ணாக குக் வித் கோமாளியில் வலம் வந்த மணிமேகலையின் இத்தனை வருட உழைப்பை ஒரே ஷோவில் முடித்துவிட்டார் பிரியங்கா, அவரால் நான் இந்த தொலைக்காட்சியை விட்டு செல்கிறேன் என சமீபத்தில் கூறியிருந்தார் மணிமேகலை. இந்த வீடியோவால் மணிமேகலைக்கு ஆதரவாளர்கள் பெறுகினர்.
இந்த நிலையில், நீண்ட நாள் இடைவெளிக்கு பின் மற்றொரு பிரபல தனியார் தொலைக்காட்சியின் "டான்ஸ் ஜோடி டான்ஸ்" என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருக்கும் மணிமேகலை அந்த நிகழ்ச்சியை சிறப்பாக வழிநடித்தி சென்று கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் போன எபிசோடில் "நான் கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கும் மேலாக தொகுப்பாளராக தான் இருந்தேன்.
ஒரு காமெடி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்த பொழுது, இவங்க நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக லீட் கொடுப்பாங்க, அதுவுமில்லாம லிங்க் கொடுப்பாங்க, இவங்கள நிகழ்ச்சியில் கோமாளியாக பண்ண விட்டா எப்படி பண்ணுவாங்கனு ரொம்ப ஏளனமா பேசுனாங்க. ஆனா, இப்போ மணிமேகலை சூப்பரா பர்வார்ம் பண்ணுவாங்க, அவங்களுக்கு ஆக்டிங்கும் வருமா என அனைவரும் கூறும் அளவுக்கு இப்போ உயர்ந்து இருக்கேன். இதுல இருந்து என்ன தெரியுது உழைச்சா எது வேணா செய்யலாம்.. புரியுதா" என கண்கலங்கி பேசி இருந்தார்.
இதனை தொடர்ந்து, தற்பொழுது மணிமேகலை "டான்ஸ் ஜோடி டான்ஸ்" நிகழ்ச்சியில் கண்கலங்கி அழுதது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் இன்ஸ்டா முதல் இணையதளங்கள் வரை "ப்ளீஸ் கம் பேக் மணிமேகலை அப்பா" என ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். அதற்கு காரணம், இந்த வாரம் எபிசோடில் மனதில் எதையாவது நினைத்துக் கொண்டு காணிக்கையை போட சொல்லி மணிமேகலையோடு தொகுப்பாளராக இருக்கும் விஜய் சொல்ல, மணிமேகலை எமோஷனல் ஆகி இருக்கிறார். காதல் திருமணம் செய்த மணிமேகலையை தனது அப்பா இன்று வரை ஏற்று கொள்ளவில்லை எனவும் அதனால் சீக்கிரம் அவர் தன்னிடம் மனம் விட்டு பேச வேண்டும் என கண்கலங்கியபடி வேண்டுதல் செய்தது பலரையும் கலங்க வைத்தது.
இதனை தொடர்ந்து நடுவர் பாபா பாஸ்கர் கவலை படாத உன் அப்பா அடுத்த வாரம் வருவார் என கூறியதால், மணிமேகலைக்கு ஆதரவாக பலரது குரல் ஒலிக்க துவங்கி, மணிமேகலையை பார்க்க வாங்க அப்பா, அவங்களை கொஞ்சம் மன்னிங்க அப்பா" என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்...! கண்ணீர் விட்டு கதறிய வரலட்சுமி, கேமி..! கட்டியணைத்து அழுத ஸ்னேகா..!