வெளியானது வீர தீர சூரன் பட மேக்கிங் வீடியோ..! விக்ரமின் நடிப்பை கண்டு மக்கள் மகிழ்ச்சி..!
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸ் ஆகியுள்ளது.
பல சிக்கல்களை சந்தித்து "வீர தீர சூரனாய்" வெளிவந்து வெற்றிகரமாய் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வெளியாக இருந்த வேளையில் ஐகோர்ட் இப்படத்திற்கு தடைவிதித்தது. "பி4யு நிறுவனம்" கொடுத்த மனுவில் "இப்படம் தயாரிக்க அந்நிறுவனம் நிதியுதவி வழங்கியுள்ளது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.
ஆனாலும் படத்தின் டிஜிட்டல் உரிமம் விற்கப்படுவதற்கு முன்பே படத்தை வெளியிட முன்வந்தால், படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று பி4யு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டது. இதனை விசாரித்த டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள், "வீர தீர சூரன் படக்குழு ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், படத்தின் அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்...! மாலையில் வெளியாகி வசூலை வாரி குவித்த "வீர தீர சூரன்"..!
பின் பல சட்ட போராட்டங்களுக்கு பின் இப்படம் வெளியானது. இப்படத்தில் என் காதல் கண்மணி, தந்து விட்டேன் என்னை, மீரா, புதிய மன்னர்கள், உல்லாசம், கண்களின் வார்த்தைகள், ஹவுஸ் புல், விண்ணுக்கும் மண்ணுக்கும், காசி, சாமுராய், கிங், சாமி, காதல் சடுகுடு, பிதாமகன், தூள், அருள், மஜா, பீமா, கந்தசாமி, மதராசப்பட்டினம், ராவணன், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, மெரினா, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, ஐ, இரு முகன், சாமி 2, ஸ்கெட்ச், கடாரம் கொண்டான், சூரியபுத்ர மகாவீர் கர்ணா, மகான், பொன்னியின் செல்வன் (PS 1), கோப்ரா, பொன்னியின் செல்வன் 2, தங்கலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்த விக்ரம் கதாநாயகனாகவும்.
"போதை ஏறி புத்தி மாறி, சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, ராயன், வேட்டையன் உள்ளிட்ட படங்களில் நடித்து ஃபேமஸான துஷாரா விஜயன் கதாநாயகியாகவும் நடித்து உள்ளனர். இப்படத்தை பார்த்த ரசிகர்கள், படத்தில் காவல் துறை அதிகாரியாக வரும் எஸ்.ஜே. சூர்யா தனது பழைய பகையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என "ரவி மற்றும் கண்ணன்" ஆகிய இருவரையும் என்கவுண்டர் செய்ய பிரமாதமாக திட்டமிடுவார் எனவும்,
பெரிய தாதாவாக இருக்கும் ரவி தனது மகன் கண்ணனை எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கதாநாயகன் விக்ரமின் உதவியை எப்படியாவது பெற்று விக்ரமை வைத்து எஸ்.ஜே. சூர்யாவை கொன்று தனது மகனை காப்பாற்ற எண்ணி விக்ரமிடம் உதவியை கேட்க, அவரும் ஒத்துக்கொண்டு காப்பாற்ற என்ன செய்கிறார் என்பதுதான் கதை" என மகிழ்ச்சியுடன் கூறி கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் விக்ரம் நடிப்பு மிகவும் பிரமாதாமாக இருக்கிறது. ரசிகர்களுக்காக தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார் என்பது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் பெரியவரை கொலைசெய்யும் காட்சிகளில் இருந்து தெளிவாக தெரிகிறது எனவும் அவரை போல ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து புகழ் பெற்ற துஷாரா விஜயன் அருமையாக நடித்துள்ளார்.
எப்படி 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவை கண்ட்ரோல் செய்வாரோ அதேபோல் விக்ரமை கட்டுப்படுத்தும் ஒரே ஆளாகவும், அவருக்கு வரும் ஆபத்தை எதிர்த்து போராடும் பெண்ணாகவும் அசத்தி இருக்கிறார் என ரசிகர்கள் புகழாரம் சுட்டி வருகின்றனர் ரசிகர்கள்.
இப்படி இருக்க, ரசிகர்கள் தன் மீது வைத்துள்ள அன்பை பார்த்த துஷாரா சமீபத்தில் தனது இன்ஸ்ட்டா பதிவில் ரசிகர்களுக்கும் இயக்குனருக்கும் நன்றி தெரிவித்தார். அந்த பதிவில், "வீர தீர சூரன் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் அளவற்ற அன்பிற்கு நன்றி. கலைவாணியின் பயணம் மிக ஸ்பெஷலானது. இந்த கதாபாத்திரம் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும். இந்த வாய்ப்பை கொடுத்த இயக்குநர் அருண்குமாருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். விக்ரமுடன் திரையை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த சந்தோஷம். ஜி.வி.பிரகாஷின் இசை கலைவாணிக்கு மேஜிக்கலாக உயிர்கொடுத்துள்ளது. எஸ்.ஜே . சூர்யா மற்றும் சுராஜ் உடன் நடித்தது மிகவும் பெருமை" என நன்றி தெரிவித்திருந்தார்.
இப்படி பலரது பாராட்டுகளையும் அன்பையும் பெற்ற இப்படம் தற்பொழுது ரூ.10 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில் இப்படத்தின் உருவாக்க காட்சிகளான மேக்கிங் காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் விகாரமின் உழைப்பையும், எஸ்.ஜெ.சூர்யாவின் உழைப்பையும், துஷாராவின் உழைப்பையும், கேமரா மேன் என அனைவரது உழைப்பையும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: தடையை நீக்கிய நீதிமன்றம்... வீர தீர சூரன் படத்தை வெளியிட அனுமதி!!