×
 

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவோம்...! மாலையில் வெளியாகி வசூலை வாரி குவித்த "வீர தீர சூரன்"..! 

'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ' என படம் லேட்டாக வந்தாலும், திரையரங்கில் ஆரவாரத்தை அதிகரிக்க செய்துள்ளது வீர தீர சூரன். 

நேற்றைய தினம் இரண்டு படங்கள் வெளியாக இருந்த நிலையில் முதல் படம் காலையிலேயே ரிலீஸ் ஆனது. ஆனால் மற்றொரு படம் எப்பொழுது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கும் வகையில் அப்படம் மட்டும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. 

அதன்படி, நேற்று வெளியான முதல் படம் `எல் 2: எம்பூரான்' இப்படத்தை ஆசிர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர், கோகுலம் கோபாலன் ஆகியோரும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தில் மோகன்லால், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் நடித்துள்ளனர். லூசிஃபர் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் படக்குழுவினர் சொன்னபடியே நேற்று நாடு முழுவதும் ஒரே நேரத்தில் வெளியாகி மக்களது பாராட்டை பெற்றுள்ளது. 

இதையும் படிங்க: கோவில் நிர்வாகத்தை குற்றம் சாட்டிய மோகன்லால்...! "மம்முட்டி பூஜை ரசிது" குறித்து பதிலடி கொடுத்த கோவில் நிர்வாகம்...!

டிரெய்லரில் காட்டியது போலவே மாஸாக ஆக்ஷன் காட்சிகளை காண்பித்து உள்ளனர். இப்படத்தில், ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பை எங்கும் குறையாத வண்ணம் பாதுகாத்து வைத்து இருக்கிறார் இயக்குனர் பிருத்விராஜ். ஆனால் படத்தின் முதல் பாகம் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் போக போக படம் மிரட்டி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளின் வடிவமைப்பு மிகவும் அற்புதமாகவும் மிரட்டுவதாகவும் உள்ளது. படத்தில் கதாநாயகர்களான டோவினோ தாமஸ் மற்றும் மஞ்சுவாரியர் நடிப்பு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது ரசிகர்கள் அவர்கள் தரப்பில் இருந்து கூறி வருகின்றனர். மேலும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. 

இப்படத்துடன் வெளியாக தயாராக இருந்த படம் தான் இயக்குனர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, துஷரா விஜயன், சித்திக் ஆகியோருடன் கேங்ஸ்டர் தோற்றத்தில் 'காளி' என்ற பெயரில் விக்ரம் நடித்து இருக்கும் "வீர தீர சூரன்".

இப்படம் நேற்று காலை வெளியாக இருந்த வேளையில் ஐகோர்ட் இப்படத்தை வெளியிடுவதற்கு தடைவிதித்தது. அதாவது, "வீர தீர சூரன்" படத்தின் தயாரிப்பு நிறுவனமான "பி4யு நிறுவனம்" இப்படம் தயாரிக்க நிதியுதவி வழங்கியுள்ளது. அதற்காக இப்படத்தின் டிஜிட்டல் உரிமத்தை அந்நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துள்ளார்.

இருப்பினும் படத்தின் டிஜிட்டல் உரிமம் இன்னும் விற்கப்படவில்லை என்றாலும் பரவாயில்லை என கூறி தயாரிப்பாளர் படத்தை வெளியிட முன்வந்தால், படத்தை ஓ.டி.டி.யில் விற்க முடியவில்லை என்று பி4யு நிறுவனம் கூறி, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், "வீர தீர சூரன் படக்குழு உடனடியாக ரூ.7 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் படத்தின் ஓ.டி.டி உரிமம் விற்கப்படும் முன் ரிலீஸ் தேதியை வெளியிட்டதால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து ஆவணங்களையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்" எனவும் உத்தரவிட்டது.

இதனால் படம் வெளியாக நான்கு வாரங்களுக்கு மேல் ஆகும் என செய்திகள் வர, விக்ரம் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். பின், மாலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் இயக்குனர் அருண்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அதில் " வீர தீர சூரன் படம் இன்று(மார்ச் 27) மாலை முதல் தியேட்டர்களில் வெளியாகிறது என்றும் என் தந்தையே காலையில் முன்று முறை இந்த படத்திற்கு டிக்கெட் வாங்க சென்று படம் வெளியாகவில்லை என திரும்பி வந்துவிட்டார்.

அதேமாதிரி விக்ரம் ரசிகர்களும், பொது மக்களும் எவ்வளவு இன்னல்களை சந்தித்து இருப்பார்கள் என எனக்கு புரிகிறது. எல்லோரிடமும் படக்குழு சார்பாக மன்னிப்பு கேட்கிறேன். இந்த பிரச்னையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் எனது திரையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி " என தெரிவித்திருந்தார். 

இதனை பார்த்த ரசிகர்கள் நேற்று மாலை உடனடியாக தியேட்டருக்கு விரைந்து சென்று படத்தை கண்டு ரசித்து உள்ளனர். பின் படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள் படம் நன்றாக உள்ளது என்றும் இப்படத்தில் காவல் துறை அதிகாரியாக வரும் எஸ்.ஜே. சூர்யா தனது பழைய பகையை தீர்த்துக்கொள்ள வேண்டும் என "ரவி மற்றும் கண்ணன்" ஆகிய இருவரையும் என்கவுண்டர் செய்ய பிரமாதமாக திட்டமிடுவார் எனவும், பெரிய தாதாவாக இருக்கும் ரவி தனது மகன் கண்ணனை எஸ்.ஜே.சூர்யாவிடம் இருந்து காப்பாற்றுவதற்காக கதாநாயகன் விக்ரமின் உதவியை எப்படியாவது பெற்று விக்ரமை வைத்து எஸ்.ஜே. சூர்யாவை கொன்று தனது மகனை காப்பாற்ற எண்ணி விக்ரமிடம் உதவியை கேட்க, அவரும் ஒத்துக்கொண்டு காப்பாற்ற என்ன செய்கிறார் என்பதுதான் கதை" என மகிழ்ச்சியுடன் தெரிவித்து மகிழ்ந்தனர். 

அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் விக்ரம் நடிப்பு மிகவும் பிரமாதாமாக இருக்கிறது. ரசிகர்களுக்காக தனது முழு உழைப்பையும் கொடுத்துள்ளார் என்பது படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் பெரியவரை கொலைசெய்யும் காட்சிகளில் இருந்து தெளிவாக தெரிகிறது எனவும் அவரை போல ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்து புகழ் பெற்ற துஷாரா விஜயன் அருமையாக நடித்துள்ளார். எப்படி 'சார்பட்டா பரம்பரை' படத்தில் ஆர்யாவை கண்ட்ரோல் செய்வாரோ அதேபோல் விக்ரமை கட்டுப்படுத்தும் ஒரே ஆளாகவும், அவருக்கு வரும் ஆபத்தை எதிர்த்து போராடும் பெண்ணாகவும் அசத்தி இருக்கிறார் என ரசிகர்கள் புகழாரம் சுட்டி வருகின்றனர். 

மேலும், படம் மாலை நேரத்தில் வெளியானாலும் ஒரே நாளில் ரூ.2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது வீர தீர சூரன் திரைப்படம். 

இதையும் படிங்க: "படம் பக்கா மாஸ்".. சொன்னதை செஞ்சிட்டாரு பிரித்விராஜ்..! `எல் 2: எம்பூரான்' படத்திற்கு குவியும் பாராட்டு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share