AK தரிசனத்தை டீவியில் காண தயாராகும் இளசுகள்..! 'குட் பேட் அக்லி' படத்தின் ஓடிடி அப்டேட்..!
அனைவரது மாபெரும் எதிர்பார்ப்பாக குட் பேட் அக்லி படத்தின் ஓடிடி அப்டேட் வெளியானது.
நடிகர் அஜித்தின் 63வது திரைப்படம் தான் ‛குட் பேட் அக்லி'. இந்த திரைப்டத்தை இயக்குநர் ஆத்விக் ரவிச்சந்திரன் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு, பிரியா பிரகாஷ் வாரியார், ரகுராம் உள்பட பல நடிகர்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். திரைப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அசத்தியுள்ளார்.
இந்த படம் தற்பொழுது அனைத்து திரையரங்குகளில் மிரட்டி வரும் நிலையில், தற்பொழுது தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாள ரசிகர்களும் இப்படத்தை பார்த்து நடிகர் அஜித்தை புகழ்ந்து வருகின்றனர். அந்த அளவிற்கு படம் மாஸ் ஹிட் கொடுத்தது. இப்படி இருக்க படத்தின் வெற்றியை குறித்து நடிகர் அஜித் தன்னிடம் பேசிய விஷயத்தை பகிர்ந்த ஆத்விக் ரவிச்சந்திரன், ஓகே படம் ஹிட் ஆகி விட்டது, படம் ப்ளாக்பஸ்டர்.
படத்தின் வெற்றியை மறந்து விடு. இந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக் கொள்ள வேண்டாம். அதே போல் தோல்வியை வீட்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம். அடுத்து என்ன என்று நிதானித்து அறிந்து பணிபுரிய தொடங்குங்கள்” என்று ஏகே தெரிவித்ததாக கூறினார்.
இதையும் படிங்க: பலித்தது பாக்கியத்தின் கனவு! இசக்கிக்கு ஆபத்தில் இருந்து மீள்வரா? அண்ணா சீரியல் அப்டேட் !
இவர் மட்டுமல்லாமல் படத்தில் வேலை செய்த பிரியா வாரியர், "இதை நீண்ட காலமாக சொல்ல காத்திருந்தேன். உங்கள் மீது எனக்கு இருக்கும் மரியாதையை எந்த அளவுக்கு வார்த்தைகளால் எழுதினாலும் போதாது.முதல் முறை பேசியது தொடங்கி கடைசி நாள் ஷூட்டிங் வரை நன்றாக உணர வைத்தீர்கள். யாரும் வேறு விதமாக உணரக்கூடாது என உறுதி செய்தீர்கள். செட்டில் நீங்கள் இருக்கும் போது அனைவரையும் பார்த்துக் கொண்டீர்கள். Cruise கப்பலில் பயணித்த போது நாம் ஒன்றாக சாப்பிட்ட உணவு, அடித்த ஜோக்குகள், அனைத்தும் மிக சிறப்பாக இருந்தது. உங்களை போல ஒருவரை நான் பார்த்தது இல்லை.
கார், குடும்பம், பயணம் செய்வது, ரேசிங் போன்ற விஷயங்களை பற்றி பேசும்போது உங்கள் கண்கள் மாறும் விதம் அப்படி இருக்கும். உங்களை சுற்றி இருக்கும் நபர்களை பார்த்து கவனித்து அவர்களை பாராட்டுவீர்கள். உங்களது பொறுமை மற்றும் அர்ப்பணிப்பு தான் என்னை போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை தருகிறது" என தெரிவித்தார்.
மேலும், நடிகர் பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பெரிய பிரபலங்களும் நடிகர் அஜித்தை குறித்தும் படத்தை குறித்தும் தங்களது கருத்துக்களை முன்வைத்து வந்தனர். இந்த சூழலில், ஏற்கனவே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான "சன் டிவி" பல கோடி ரூபாய் செலவு செய்து இந்த படத்தையும் தன் வசமாக்கி உள்ளது என கூறிவந்த நிலையில் தற்பொழுது தொலைக்காட்சி உரிமை ஒருபுறம் இருந்தாலும் ஓடிடி உரிமையை நாங்கள் தான் பெற்று உள்ளோம் என அந்நிறுவனத்தினர் கூறிவருகின்றனர்.
இந்த நிலையில், திரையரங்கில் கொண்டாடப்பட்டு வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் மே 9 அல்லது 10ம் தேதி பிரபல ஓடிடியான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ரூ. 90 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாம்.
இதனை பற்றி தகவல் அறிந்த சினிமா ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தை வீட்டில் காண ஆவலுடன் காத்து கிடக்கின்றனர்.
இதையும் படிங்க: ரெட்ரோ படம் வெற்றிக்காக ஜோதிகா சூர்யா தம்பதி சிறப்பு பூஜை..! இருவரின் பக்தி பரவசத்தால் ரசிகர்கள் ஆச்சர்யம்..!