×
 

பத்மபூஷன் விருது பெற்ற ஜோர்.. குடும்பத்தினருடன் போட்டோ ஷூட் நடத்திய "AK"..!

பத்மபூஷன் விருதுபெற்ற பிறகு தனது குடும்பத்தினருடன் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார் நடிகர் அஜித்.

நடிகர் அஜித் பல போராட்டங்களை கடந்து தான் திரையுலகில் இன்று யாரும் அசைக்க முடியாத ஆலமரமாக நின்று கொண்டு இருக்கிறார். இப்படி பல படங்களில் நடித்த அஜித்துக்கு உண்மையில் ஆர்வம் அதிகம் உள்ளது எதில் என பார்த்தால் ரைடு செய்து உலகத்தை சுற்றுவது தான். தனது படங்களை முடித்து விட்டு உடனே தனது பி.எம்.டபிள்யு பைக்கை எடுத்து கொண்டு உலகம் சுற்றும் வாலிபனாக சீட்டாட்டம் பறந்து விடுவார் நடிகர் அஜித். இப்படி பைக்குகளில் மட்டுமே நாடுகளை கடந்து சென்ற அஜித் தற்பொழுது உலக நாடுகள் பார்க்கும் வண்ணம் நாடு கடந்து கார் ரேஸில் கலந்து இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து வருகிறார். 

அந்த வகையில், சமீப காலமாக, கார் ரேஸில் களமிறங்கி அசத்தி வருகிறார். இந்த சூழலில், தனக்கான அணியை திரட்டி, இந்தியாவிற்காக கார் ரேஸில் கலந்து கொண்டு போராடி வந்தார் அஜித்.

இதையும் படிங்க: குடியரசு தலைவர் கையால் அஜித்துக்கு விருது..! குடும்பத்துடன் டெல்லி புறப்பட்ட "AK"..!

ஏற்கனவே நடந்த போட்டியில் பலமுறை அவருக்கு விபத்துக்கள் ஏற்பட்டாலும், களத்தில் விடாமுயற்சியுடன் போராடிய நடிகர் அஜித், ரேசராக தனது அணியை மூன்றாவது இடத்தில் நிலை நிறுத்தி வெற்றியைக் கண்டார். இந்த வெற்றியை தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் கொண்டாடி தீர்த்தனர்.   

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் அஜித் ரேஸிற்கு மீண்டும் தயாராகும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டார். இதனை அடுத்து, அதே ரேஸில் நடிகர் அஜித்தின் கார் விபத்துக்குள்ளானது.

இதனை பார்த்து ரசிகர்கள் வருத்தத்தில் இருக்க, தற்பொழுது இந்த ரேஸில் நடிகர் அஜித்தின் டீம் இரண்டாம் இடத்தை பிடித்து சாதித்து இருக்கிறார். இதுவரை இரண்டு வெண்கலப்பதக்கம் வென்ற அஜித்தின் அணி தற்பொழுது வெள்ளிப்பதக்கத்தையும் பெற்று உள்ளது. 

இப்படி இருக்க,கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகளில் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து சமீபகாலமாக எங்கு சென்றாலும் தனது குடும்பத்துடன் அதிகமாக காணப்படும் நடிகர் அஜித், இந்த முறை, தனக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பெற தனது குடும்பத்துடன் டெல்லிக்கு சென்று பத்மபூஷன் விருதை தன்வசப்படுத்தி வந்தார். 

இதனை கண்டு அவரது ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்து உள்ள நிலையில், தற்பொழுது விருது பெற்ற மகிழ்ச்சியை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு அசத்தியுள்ளார் நடிகர் அஜித். 

இதையும் படிங்க: AK என்றால் சும்மாவா..! ரேஸில் 2ம் இடம் பிடித்த அஜித்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share