கங்கை அமரன் பேச்சுக்கு பிரேம்ஜி பதிலடி..! அஜித்துக்காக சொந்த அப்பாவையே எதிர்த்த தீவிர ரசிகன்..!
நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை குறித்து பேசிய கங்கை அமரனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரேம்ஜி.
திரையரங்கில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வரும் 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியானதால் ரசிகர்கள் மேலும் கொண்டாட்டத்தில் உள்ளனர். அதன்படி, இப்படம் மே 9 அல்லது 10ம் தேதி பிரபல ஓடிடியான நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவரும் என கூறப்படுகிறது. மேலும், இப்படத்தை ரூ. 90 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இப்படி இருக்க, படம் வெற்றியடைந்த கொண்டாட்டத்தில் ரசிகர்களும் படக்குழுவினரும் குஷியில் இருந்த பொழுது இளையராஜா அந்த சந்தோஷத்தில் மண்ணை வீசி எறிந்தார். அதன்படி, குட் பேட் அக்லி படத்தின் ட்ரெய்லரில் 'ஒத்த ரூபாய் தாரேன்' பாட்டை போட்டதுக்கு ஒத்த ரூபாய் வேண்டாம் ரூ.5 கோடி போதும் என இளையராஜா, இந்த பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு கேட்டு இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் இதற்கான சரியான விளக்கத்தை ஐந்து நாட்களுக்குள் தரவேண்டும் அல்லது படத்திலிருந்து பாட்டை நீக்க வேண்டும் இவை இரண்டையும் செய்யவில்லை என்றால் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என இளையராஜா தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: எனக்கு இசை தெரியாது ஆனால் இசைக்கு என்னை தெரியும்..! இளையராஜாவின் மாஸ் ஸ்பீச்..!
இதனால் சமூக வலைத்தளங்கள் முழுவதும் இளையராஜாவை வசைபாட, தனது அண்ணனுக்கு ஆதரவாக பதிலடி கொடுத்தார் கங்கை அமரன். அவர் பேசுகையில், குட் பேட் அக்லி படத்திற்கு ரூ.7 கோடி சம்பளம் கொடுத்து இசையமைப்பாளர் வைத்திருக்கிறீர்கள். அவர் போட்ட பாடலுக்கு எந்த கைத்தட்டல்களும் விழாமல் எங்கள் பாடலுக்கு மட்டுமே கைதட்டல் விழுகிறது. ஆக, எங்கள் பாடலை போட்டு நீங்கள் நடனம் ஆடினால் என்ன அர்த்தம்.
அப்பொழுது ஒரு உண்மையை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். ரூ.7 கோடி சம்பளம் வாங்கி படத்திற்கு இசையமைத்தவரின் பாடல்கள் ஹிட் ஆகவில்லை. எங்கள் பாடலை போட்ட உடனே படம் ஹிட் ஆகிறது படத்திற்கு கைத்தட்டல் வருகிறது.
இப்படி எங்கள் பாட்டினால் படம் ஹிட் ஆகும்பொழுது எங்களுக்கும் ஏன் சம்பளத்தில் பங்கு கொடுக்க கூடாது. அதை கொடுத்திருக்க வேண்டும் இல்லையா? ஹிட் கொடுக்கும் அளவிற்கு இசையமைத்த எங்களிடம் பாட்டிற்கான அனுமதி வாங்க வேண்டும் இல்லையா? உண்மையிலேயே நீங்கள் மதித்து அனுமதி கேட்டிருந்தால் அண்ணன் இளையராஜா இலவசமாக பாடலை கொடுத்திருப்பார்.
கேட்காமல் பயன்படுத்தியதால்தான் அண்ணனுக்கு கோபம் வருகிறது. உண்மையில் வழக்கு தொடர்வது பணத்தாசையால் இல்லை. அது எங்களிடமே அதிகம் கொட்டிக்கிடக்கிறது. விதி என்று ஒன்று உள்ளது. ஹிட்டானது அஜித் படம் இல்லை, அதில் வந்த எங்கள் பாட்டு தான். உங்கள் இசையமைப்பாளரால் செய்ய முடியாததை எங்கள் பாட்டு செய்து படத்தை ஜெயிக்க வைத்திருக்கிறது. ஆக அதை முறைப்படி கேட்டிருந்தால் இன்னும் சந்தோஷமாக கொடுத்திருப்போம்' என்றார்.
இவரது பேச்சை சிலர் சரியாக தான் பேசுகிறார் என சொன்னாலும் பலர் இவரையும் சேர்த்து வசைபாடி வருகின்றனர். இந்த நிலையில், அண்ணனுக்கு தம்பியும், தம்பிக்கு அண்ணனும் வக்காலத்து வாங்கி கொண்டு இருக்க, இளையராஜாவுக்காக கங்கை அமரன் தொண்டை தண்ணி வத்த பேசிய அத்தனை விளக்கங்களையும் ஒரே வார்த்தையில் முடித்துள்ளார் அவரது மகன் பிரேம்ஜி.
நடிகரும் கங்கை அமரனின் மகனுமான பிரேம்ஜி பேசுகையில், " எனது அப்பா அவரது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் அவருக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதேபோல நான் எனது அண்ணனுக்கு ஒரு பிரச்சினை என்றால் கண்டிப்பாக பேசுவேன் அல்லவா.அதற்காக தான் வந்திருக்கிறேன்.
இளையராஜாவால்தான் படம் ஓடியது என அவர் சொன்னதாக கேட்கிறீர்கள். அதெல்லாம் சும்மா. உண்மை என்பது மக்கள் அனைவருக்கும் தெரியும். குட் பேட் அக்லி படம் ஹிட் ஆனதற்கு முழுக்க முழுக்க அஜித் தான் முழு காரணம். அதுதான் நிஜம்'' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: யாருக்கும் தெரியாத ஷாருக்கானின் குடும்ப ரகசியம்..! அவருக்குள் இப்படி ஒரு வலியா.. புலம்பும் ரசிகர்கள்..!