யாருக்கும் தெரியாத ஷாருக்கானின் குடும்ப ரகசியம்..! அவருக்குள் இப்படி ஒரு வலியா.. புலம்பும் ரசிகர்கள்..!
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு சொந்த பிரச்சனை இருக்கும் என்பது யாருக்கும் தெரியாமல் இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் ஷாருக்கான் ஹிந்தி சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கக்கூடிய நடிகராகவும் அப்பகுதியின் சூப்பர் ஸ்டார் ஆகவும் திகழ்ந்து வருகிறார். இப்படிப்பட்ட ஷாருக்கான் தனக்கு பிடித்த ஹீரோ என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்று சொல்லி, அவர் நடித்த "சென்னை எக்ஸ்பிரஸ்" படத்தில் ரஜினிக்காக 'லுங்கி டான்ஸ்' என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர்.
இப்படி இருக்க, இவரது நடிப்பு ஒருபுறம் ஃபேமஸ் என்றால் இவரது சிக்ஸ் பேக்கும் மறுபுறம் ஃபேமஸ். அவரது பல படங்கள் இன்றும் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. உதாரணத்திற்கு சென்னை எக்ஸ்பிரஸ், ஹாப்பி நியூயர் போன்ற படங்கள் இன்றளவும் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக இருந்து வருகிறது. அதுமட்டுமல்லாது ட்ரெயினில் "நெஞ்சி உச்சி கொட்டி துடிக்குது தையா" என்ற பாடலுக்கு அப்பொழுதே ட்ரெயின் மீது ஏறி பாடி ஆடும் காட்சிகளும் இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.
இதையும் படிங்க: அஜித்தால் இல்லை எங்கள் பாடலால் தான் படம் ஹிட்..! இளையராஜாவுக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன்..!
அப்படிப்பட்ட ஷாருக்கானை வைத்து யாராவது தமிழில் மீண்டும் படம் எடுக்க மாட்டார்களா என்று நம் கண்கள் தேடிக் கொண்டிருந்த பொழுது, இதோ நான் இருக்கிறேன் என்று வந்தவர் தான் இயக்குநர் அட்லி. இவர் நடிகர் ஷாருக் கானை வைத்து பிரம்மாண்டமான 'ஃபேன் இந்தியா' படமான "ஜவான்" திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதுவரைக்கும் ஷாருக்கான பல ஆக்சன் படங்களில் பார்த்தவர்களுக்கு இந்த படம் ஒரு வித்தியாசத்தையும் கௌரவத்தையும் தேடித்தந்தது.
இந்த சூழலில் அவரது மகன் போதை மருந்து கடத்தல் என்ற வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட, மனம் உடைந்த ஷாருக்கான் தன் மகனை மீட்டெடுக்க படாத பாடுபட்டு வந்தார். நெட்டிசன்களும் அவரைக் குறித்தும் அவரது மகனை குறித்தும் வசைப்பாடி தீர்த்தனர். ஆனால் தன் வாழ்க்கையில் நெகட்டிவிட்டிகளை மட்டுமே பார்த்து வந்த ஷாருக்கானுக்கு, இது ஒன்றும் பெரிய விஷயமாக தோன்றவில்லை.தன் மகனை வெளியே கொண்டு வரவேண்டும் என்பதில் தீவிரம் காட்டி மீட்டெடுத்தார். பல அடிகளை தன் வாழ்க்கையில் பட்டு பல அவமானங்களையும் சந்தித்து இன்று தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் ஷாருக்கான் தற்பொழுது புதிய வீட்டிற்கு சென்று உள்ளார்.
இதனை தொடர்ந்து, தற்பொழுது ஷாருக்கான் தனது மகனுடன் சேர்ந்து மது விற்பனை தொழிலை தொடங்கி இருக்கிறார். அந்த வகையில் "டியாவோல்" என்ற பிராண்டில் மது வகைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கிறார் ஷாருக்கான். அவரது பிராண்ட் மதுபானங்கள் சர்வதேச அளவில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. அதற்கு காரணமாக இருந்தது ஜெர்மனியில் உள்ள பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச மது போட்டி தான். இதில் ஷாருக்கான் நிறுவனத்தின் மதுவான "டியாவோல்" பிராண்டும் கலந்து கொண்டன.
இதில் ஷாருக்கானின் கம்பெனி பிராண்டான "டியாவோல்", 100-க்கு 95 சதவீத புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது. இதனால் பல முக்கிய புள்ளிகள் மத்தியிலும் மது பிரியர்கள் மத்தியிலும் இவரது டியாவோல் பிராண்டின் பெயர் அடிபட தொடங்கி இன்று அவரது வியாபாரம் சூடுபிடித்துள்ளது. இதில் 'டியாவோல் சிங்கில் எஸ்டேட் வோட்கா' ஒரு பாட்டில் ரூ.5000-க்கும், விஸ்கி ரூ.6300-க்கும், 'டியாவோல் பிரமியம் ஸ்காட்ச் விஸ்கி' மகாராஷ்டிராவில் ரூ.5350-க்கும், கோவாவில் ரூ.4500-க்கும் விற்பனையாகிறது.
இப்படி சினிமா துறையில் இருந்து ஒருபக்கம் கோடிகளில் பணம் வர, தற்பொழுது அவரது சரக்கு பிஸினஸில் இருந்தும் பண மழையில் நனைந்து வருகிறார் ஷாருக்கான். இப்படி அவரது சொத்துக்களை பார்க்கும் சாமானிய மக்கள் உனக்கென்னப்பா கவலை.. பணம் வருது மகிழ்ச்சியாக இருக்க என ஷாருக்கானை பார்த்து சொல்லி வருகின்றனர். ஆனால் எவ்வளவு தான் பணம் வந்தாலும் எனக்கும் மனதில் நீங்காத வலி உள்ளது என தனது வேதனையை பகிர்ந்து இருக்கிறார் நடிகர் ஷாருக்கான்.
அந்த வகையில், ஷாருக்கான் சமீபத்தில் தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், எனக்கு அழகான தங்கை ஒருவர் உள்ளார். என்னுடைய தந்தையின் மரணம் என் சகோதரியை மிகவும் பாதித்தது. அவர் இறந்த பொழுது அவரது உடலின் அருகே எதுவும் பேசாமல் நின்றபடி அப்படியே பார்த்துக்கொண்டே இருந்து மயங்கி விழுந்தார் எனது சகோதரி.
பின் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான அவர் யாரிடமும் பேசாமல் படுத்த படுக்கையாக இருந்தார். அவரை அழைத்து கொண்டு மருத்துவரிடத்தில் சென்று பார்த்த பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் சீக்கிரம் மரணமடைந்து விடுவார் என சொல்ல, பயத்தில் அவரை உடனடியாக ஸ்விட்சர்லாந்தில் கொண்டு சென்று பல மருத்துவர்களிடம் காண்பித்தேன்.
அங்கு அவர் கொஞ்சம் சரியாகி வரும் வேளையில் எனது அம்மாவும் இறக்க, அவர் முழுவதுமாக மன அழுத்தத்தில் சென்று விட்டார். எனது உயிரான தங்கைக்காகவும் எனது மனைவி பிள்ளைகளுக்காகவும் தான் நான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். உண்மையில் நான் சினிமாவில் என்னை வலிமை மிகுந்தவனாக காண்பித்து கொள்கிறேன். ஆனால் சினிமாவை விட நான்தான் போலியாக உள்ளேன். ஒருபுறம் என் சகோதரியை நினைத்து அழுகிறேன். உங்கள் முன் சிரிப்பதை போல் நடிக்கிறேன் என்றார்.
இதையும் படிங்க: தன்னை பற்றி அவதூறு பேசிய பிரபலம்..! பாலிவுட் பாடகருக்கு ஏ.ஆர். ரகுமான் பதிலடி..!