நான் கண்ட கனவு எல்லாம் பலிக்காமல் போனது... நடிகை சமந்தா உருக்கம்..!
இதற்கு முன் மேடையில் கண்ணீர் விட்டு அழுத சமந்தா தற்பொழுது தனது கனவு நினைவாகவில்லை என உருக்கத்துடன் தெரிவித்து உள்ளார்.
தனது கணவரை விட்டு பிரிந்த பின்பு மனவேதனையில் இருந்த சமந்தா தன்னுடைய தனிமையை போக்க, ஈஷா யோகா மையம் போன்ற பல பகுதிகளுக்கு சென்று தன்னை ஆசுவாசப்படுத்தி வந்தார். இப்படி இருக்க, நாக சைதன்யாவே தன்னுடைய வாழக்கையை மாற்றி வாழும் பொழுது நம்மால் முடியாத என புரிந்து கொண்ட சமந்தா, சினிமா தான் என் முதல் "காதல்" அதனுடன் தான் இனி பயணிக்க போகிறேன் என கூறி, இயக்குநர் 'நந்தினி ரெட்டி' இயக்கும் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருவதுடன் முற்றிலும் பர்தா அணியும் கிராமத்து பெண்கள் குறித்த கதையாக உருவாகி வரும் "பரதா" என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரனுடன், சமந்தா அனைத்து பெண்களுக்கும் ஸ்விட்டான மெசேஜ் சொல்லும் கெஸ்ட் ரோலில் நடித்து இருக்கிறார்.
இந்த சூழலில், சமீபத்தில் நாக சைதன்யா தரப்பினர் நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.200 கோடி கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் இதனை வாங்க மறுத்த சமந்தா என்னால் உழைத்து முன்னேற முடியும். அதற்குண்டான திறமை என்னிடம் உள்ளது. உங்கள் பணத்தை நீங்களே வைத்துங்கள் என்று சொல்லி வந்தவர், தற்பொழுது சிங்கப்பெண்ணாய் உருவெடுத்து ஜோதிகா மற்றும் ரம்யாவை போல் நடிகைளைகளுக்கு பெண்களுக்கு சினிமா துறையில் மாற்றம் வேண்டும் என வாயிலேயே சொல்லி கொண்டு இருக்காமல் சமீபத்தில் முதல் பாலில் சிக்ஸர் அடித்திருந்தார்.
இதையும் படிங்க: கோடிகளில் ஜீவனாம்சம் கொடுக்க வந்த நடிகர்.. தன்மான சிங்கமாய் மறுத்த நடிகை..!
அதன்படி, நடிகை சமந்தா 2023ம் ஆண்டு "திரலாலா மூவிங் பிக்சர்ஸ்" என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அதில் தற்பொழுது முதல் திரைப்படமாக "பங்காரம்" என்ற படத்தை இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கி வருகிறார். இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தா, எந்தவித பாலின பாகுபாடும் இன்றி தன்னை வைத்து இயக்கும் இப்படத்தின் இயக்குனருக்கு சம்பளம் வழங்கி இருந்தார். இந்த நிகழ்வை இந்திய சினிமாவிலேயே இப்படி ஒரு காரியத்தை இதுவரை யாரும் செய்ததில்லை அந்த அளவிற்கு ஆண் இயக்குநருக்கு இணையான சம்பளத்தை தனக்கு சமந்தா வழங்கி இருக்கிறார் என நந்தினி ரெட்டி என தெரிவித்து இருந்தார்.
அதுமட்டுமல்லாமல், விவாகரத்திற்கு முன்பு நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் அவரவர்கள் கைகளில் ஒரே மாதிரி டாட்டூ போட்டு இருந்தனர்.விவாகரத்துக்கு பிறகும் சமந்தா அந்த டாட்டூவை அப்படியே அழிக்காமல் தனது கைகளில் சுமந்து இருந்தார். ஆனால் தற்போது சமந்தா, கூடவே இல்லாத கணவரின் பெயர் கையில் எதற்கு என முடிவெடுத்து அதனையும் தனது கைகளில் இருந்து அளித்துள்ளார்.
இப்படி தன் வாழ்வில் கடந்து வந்த துன்பங்களை எல்லாம் முற்றிலும் அழித்து புது அவதாரமாக வந்த சமந்தா நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஷயம் பலரது கவனத்தையும் சமீபத்தில் ஈர்த்தது. அதில்,"கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எந்த படத்திலும் நடிக்கவே இல்லை. பெரிய ஹிட்டான படங்களையும் கொடுக்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் என்மீது இவ்வளவு அன்பு வைத்திருப்பதற்கு என்ன காரணம் என்று எனக்கே தெரியவில்லை. இந்த அன்பிற்கு நான் தகுதியானவள் தானா என்றும் எனக்குத் தெரியவில்லை" என மேடையில் கண்கலங்கி பேசி இருந்தார். இதனை அடுத்து சமந்தாவுக்கு ஆறுதல் பெருகி வரும் சுழலில, தற்பொழுது தனது நிறைவேறாத ஆசையை கூறி அனைவரையும் கலங்கடித்து இருக்கிறார்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை சமந்தா, அங்கு தன் நிறைவேறாத ஆசை குறித்து பகிர்ந்துள்ளார். அதில்,"கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன் தனது கல்லூரி படிப்பை நான் முடித்தேன். ஆனால் அதற்கு பிறகு, சிட்னி பல்கலைக்கழகத்தில் மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது எனது பெரிய கனவாக இருந்தது ஆனால் அந்த கனவு சில காரணங்களால் நிறைவேறாமல் போய்விட்டது" என்று உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "ஊ சொல்றியா மாமா" பாடலுக்கு முதலில் கமிட்டான நடிகை இவங்கதான்.. ரகசியத்தை உடைத்த இயக்குநர்..!