×
 

ஆட்டோவில் போன கீர்த்தி சுரேஷ்..! பராசக்தி படத்தில் மறைமுக என்ட்ரியா..? குழப்பத்தில் ரசிகர்கள்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் ஸ்ரீலங்காவை முழுவதுமாக சுற்றிவிட்டுதான் இந்தியா திரும்புவதாக சபதம் எடுத்து சென்று இருக்கிறார்.

திருமணத்திற்கு முன்பு என்றும் அழகாக இருந்த கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு பின்பாக மிகவும் அழகாக மாறி இருக்கிறார் என்று எத்தனை பேர் உணர்ந்து உள்ளீர்கள். அந்த அளவிற்கு மிகவும் மகிழ்ச்சியாக தற்பொழுது உலகம் முழுவதும் தனி பறவையாக இல்லாமல் தனது கணவருடன் இணைந்து ஜோடி பறவையாக இறக்கைகட்டி சிறகடித்து பறந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். பார்க்கும் இடங்களில் எல்லாம் ஜாலி செய்து, வைப் பண்ணிக்கொண்டு அழகிய சிரிப்புடன் காணப்படுகிறார் நடிகை கீர்த்தி.

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சித்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்த கீர்த்தி சுரேஷ், நடிகர் விஜய், சிவகார்த்திகேயன், விக்ரம், என பல முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து தற்பொழுது பாலிவுட்டிலும் நடித்து வந்தாலும் இன்னும் அந்த குழந்தை முகமும் குழந்தை தனமான சிரிப்பும் இன்றும் மாறாமல் அப்படியே அவரிடம் காணப்படுகிறது.

இதையும் படிங்க: கீர்த்தி சுரேஷின் அடுத்த படம் எங்கு தெரியுமா..! பான் இந்திய ஸ்டாராக மாறி இருக்கும் கீர்த்தி..!

குழந்தையாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் இதுவரை, இது என்ன மாயம், தொடரி, ரெமோ, ரஜினி முருகன், பாம்பு சட்டை, பைரவா, சண்டக்கோழி 2, சீமராஜா, சாமி 2, சர்கார், நடிகையர் திலகம், தானா சேர்ந்த கூட்டம், மிஸ் இந்தியா, பெண்குயின், மரக்கர்: அரபிக்கடலின் சிம்ஹம், அண்ணாத்த, சாணிக் காயிதம், குட் லக் சகி, மாமன்னன், சைரன், ரகு தாத்தா, கல்கி 2898 AD போன்ற படங்களில் நடித்துள்ளார். இன்னும் கண்ணிவெடி மற்றும் ரிவால்வர் ரீட்டா போன்ற படங்களில் நடித்தும் வருகிறார். 

இதனை அடுத்து,படங்களில் ஹீரோக்களுடன் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கும் கீர்த்தி எப்பொழுது தனது உண்மையான ஹீரோவுடன்  திருமணம் முடித்து ரொமான்ஸ் செய்வார் என ரசிகர்கள் கேட்டு ஆவலுடன் காத்திருக்க, கடந்த 2024 டிசம்பர் 12ஆம் தேதி கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் 'அந்தோணி தட்டிலை கோவாவில் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, தற்பொழுது வரை ஹனிமூனில் பிசியாக இருக்கும் கீர்த்தி சுரேஷ், பிராமண முறைப்படி நடந்த திருமணத்திற்கு பிறகு, கிறிஸ்தவ முறைப்படி நடைபெற்ற திருமண போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருந்தார். இதனை அடுத்து, பார்ட்டிகளுக்கும் தனது கணவருடன் ரியல் ஹீரோ, ஹீரோயினாக என்ட்ரி கொடுத்து, டான்ஸ் வைஃப் கொடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிக்காட்டி வருகிறார்.

இந்த சூழலில், ஹனிமூனின் அடுத்த பயணமாக இலங்கைக்கு செல்ல இருப்பதாகவும், அதற்காக தன்னை ஆயத்தப்படுத்தி கொள்ளும் புகைப்படத்தையும், இலங்கையில் தனது கணவருடன் என்ட்ரி கொடுத்த புகைப்படத்தையும் சமீபத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்து இருந்தார் கீர்த்தி சுரேஷ்.

இதனை தொடர்ந்து, இலங்கைக்கு சென்ற கீர்த்தி சுரேஷை, சிறப்பு விருந்தினராக அழைத்த அங்குள்ள தொழிலதிபர் ஒருவர், அவரது கடையை திறந்து வைக்க சொல்லி இருந்தார். இதனால் அவரது அன்புக்கு கட்டுப்பட்டு கடையை திறக்க சென்ற கீர்த்தி சுரேஷுக்கு இலங்கை மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும், காரில் இருந்து இறங்கிய கீர்த்தி சுரேஷை அங்கிருந்து கடைக்கு செல்லமுடியாத அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோத, ஒருவழியாக பவுன்சர்களின் உதவியுடன் கடையை சென்றடைந்தார் கீர்த்தி சுரேஷ். ஆனால் கடைக்குள் கீர்த்தி சுரேஷை அழைத்து செல்ல பவுன்சர்கள் பட்ட பாடு மிகவும் கடினமாக இருந்தது. இதனை அடுத்து மேடையில் ஒட்டு மொத்த ரசிகர்களுடன் க்யூட்டாக சிரித்தபடி செல்ஃபி எடுத்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில், இன்னும் இலங்கையில் இருந்து தனது ஹனிமூனை முடித்து வெளியே வர மனமில்லாத கீர்த்தி, மொத்த ஸ்ரீலங்காவையும் ஆட்டோவில் சுற்றி பார்த்து வருகிறார். இதனை தனது இன்ஸ்ட்டா தளத்தில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

மறுபுறம் சிவகார்த்திகேயன் ஸ்ரீலங்காவில் நடித்து வரும் பராசக்தி படத்தில் ஒருவேளை மறைமுகமாக நடிக்கிறாரா கீர்த்தி சுரேஷ் என்ற கேள்வியும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: ஸ்ரீலங்காவையே மிரள வைத்த கீர்த்தி சுரேஷ்.. ஹனிமூனில் இப்படி ஒரு சர்ப்ரைஸா..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share